பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 27. தமிழும் சாக்கியமும்[1]



பாரத நாட்டுப் பழைய மதங்களுள் ஒன்று பெளத்த மதம். ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, இந்திய நாட்டின் வட பாகத்திலுள்ள ஒரு சிறு தேசத்தில் புத்தர் பெருமான் பிறந்தார்; இளமையிலேயே, இவ்வுலக வாழ்க்கை நிலையற்றதென்று உணர்ந்தார்; தமக்குரிய பெருஞ்செல்வத்தையும், பெற்றோரையும், அழகிய மனைவியையும், அருமைக் குழந்தையையும் விட்டுத் துறவியானார்; ஒர் ஆற்றங்கரையில் நின்ற அரச மரத்தின்கீழ் அமர்ந்து, நெடுங்காலம் தவம் புரிந்து மெய்ஞ்ஞானம் பெற்றார். அவர் காட்டிய நெறி புத்தமதம் என்று பெயர் பெற்றது. புத்தர் சாக்கிய குலத்திற் பிறந்தவராதலால் அம்மதத்தைச் சாக்கியம் என்றும் சொல்வதுண்டு.

புத்தர், எண்பது வயதளவும் இவ்வுலகில் வாழ்ந்தார்; பல நாடுகளிற் சென்று தம்முடைய மதக்கொள்கைகளைப் பரப்பினார். வடநாட்டு மன்னர் பலர், அச்சமயத்தை மேற்கொண்டார்கள். அவர்களில் மிகச் சிறந்தவன் அசோக மன்னன். ஆசிய கண்டத்திலுள்ள பல நாடுகளில் பெளத்த மதம் பரவிற்று. தமிழ் நாட்டிலே திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் காலத்தில் பெளத்த மதம் பரவியிருந்த பான்மை அவர் வரலாற்றால் விளங்குகின்றது. மணிமேகலை என்னும்


  1. சென்னை வானொலி நிலையத்திற் பேசியது. அத் நிலையத்தார் இசைவுபெற்றுச் சேர்த்தது.