பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28. இறையவரும் இன்னுயிரும்

மன்னுயிர் அனைத்தையும் ஆதரித்துக் காக்கும் அருள்நெறியே நன்னெறியெனத் தமிழ்நாடு பழங்காலத்தே அறிந்துகொண்டது. பிற உயிர்க்கு நலம் புரிந்தவர் இன்புறுவரென்றும், தீங்கிழைத்தவர் துன்புறுவரென்றும் அறநூல் அறிவுறுத்துகின்றது. இவ்வுலகில் வாழும் உயிர்ப்பொருள்கள் பல திறப்பட்ட அறிவு வாய்ந்தன வாயினும் அவற்றுள் ஊடுருவிச் செல்லும் உயிர்த்தன்மை ஒன்றே என்னும் உண்மையைத் தமிழ்ப் பனுவல்களிற் பரக்கக் காணலாம். அறிவாற் குறைந்த உயிர்கள் பல பிறவிகளெடுத்து மேம்பட்டு, முற்றிய அறிவுடைய உயிர்களாகுமென்று பழந்தமிழ் மக்கள் கருதினார்கள், புல்லாகவும், பூடாகவும் நிற்கும் சிற்றுயிர்கள் அறிவு முதிர்த்து, மக்களாகவும் தேவராகவும் வளர்ந்து செல்லும் தன்மையைத் திருவாசகம் தெள்ளிதின் உணர்த்துகின்றது. இதனாலேயே புல்லுயிரையும் துன்புறுத்தலாகாதென்று நல்வோர் அருளிப் போத்தனர்.

மக்கள் தம் அறிவின் மதுகையால் ஏனைய உயிர்கள் நலியாவண்ணம் ஆன்றோர் வகுத்துள்ள செவ்விய நெறி அறியத் தக்கதாகும். எல்லாம் வல்ல இறைவனிடம் அச்சமும் அன்பும் எஞ்ஞான்றும் மக்கட்கு உண்டு என்னும் உண்மையை உணர்ந்த அறி