பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தமிழ் இன்பம்


"வருகஎன் மதலாய், இளைஞர் ஐவரும்நின்
      மலரடி அன்பினால் வணங்கும்
உரிமையால் மனம்ஒத்து ஏவலேபுரிய
      ஒருதனிச் செய்யகோ லோச்சி
அரசெலாம் வந்துன் கடைத்தலை வணங்க
      ஆண்மையும் செல்வமும் விளங்கக்
குருகுலா திபர்க்கும் குரிசிலாய் வாழ்வு
      கூர்வதே கடனெனக் குறித்தாள்."

வருக, என் பிள்ளாய்; உன் தம்பியர் ஐவரும் அன்பினால் வணங்கி ஆட்செய்ய, நீயே அரசனாய் அமர்ந்து ஆண்மையும் செல்வமும் விளங்கச் செங்கோல் செலுத்துவாயாக" என்று மொழிந்தாள் குந்திதேவி.

"தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை” என்னும் அமுத வாக்கைக் கர்ணன் நன்கு அறிந்தவனே யாயினும், கயோதனன் தனக்குச் செய்த பெரு நன்றியை மறந்து அன்னையின் உரைவழி நடக்க இசையானாயினான்:

"திடம்படுத் திடுவேல் இராசரா சனுக்குச்
      செருமுனைச் சென்றுசெஞ் சோற்றுக்
கடன்கழிப் பதுவே எனக்குஇனிப் புகழும்
      கருமமும் தருமமும் என்றான்.”

“எனக்கு நன்றி செய்த துரியோதன மன்னனுக்காக அமர்க்களத்திற் சென்று போர் புரிவதே அறமும் புகழும் ஆகும். அவன் உணவையுண்டு வாழ்ந்த யான், செஞ் சோற்றுக் கடன் கழியாது என் தம்பியருடன் சேரேன்” என்று கர்ணன் எடுத்துரைத்த வீர மொழிகளில் அவனது நன்றி மறவாத நலத்தினை