பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருமையில் ஒருமை

213


நன்கு காணலாம். பாண்டவர் தன் தம்பியர் என்று கருதிப் பரிவு கொள்ளாது, தாயரின் மொழியைப் போற்றுதலே தக்க தென்றும் எண்ணாது, செய்ந்நன்றி யறிதலே செம்மை சான்ற அறம் எனத் துணிந்து, அவ்வற நெறியில் நின்று, அமர்க்களத்தில் ஆவி துறந்த கர்ணனது அருங்குணம் போற்றுதற்குரியதன்றோ?

இவ்வாறே இலங்கை வேந்தனுடைய தம்பியாய்த் தோன்றிய கும்பகர்ணன், வரத்திலும் வலிமையிலும் சிறந்து விளங்கினான். கூற்றையும் ஆடல் கொண்ட அவ்வீரன் அறநெறியை ஆதரிக்கும் நீர்மை வாய்ந்தவன்; அயோத்தி மன்னனுடைய மனையாளான சீதையை இலங்கை நாதன் கவர்ந்து சிறை வைத்தது அடாத செயல் என்று அவனிடம் எடுத்துரைத்தான்: பிறன்மனை நயந்த தமையனது செயல் தவறு என்று இடித்துரைத்து அவனைத் திருத்த முயன்றான்; ஆயினும், தீராத மோகம் கொண்ட தமையனைத் திருத்துதல் இயலாதென்றறிந்த போது, அவனுக்குத் துணையாக அமர்புரிந்து ஆவி துறப்பதே ஏற்றதாகும் என்றெண்ணிப் போர்க்களம் புகுந்தான். கும்பகர்ணனுடைய நீர்மையையும் திறமையையும் அறிந்த இராமன் அவ்வீரனைத் தன்பால் இழுத்துக் கொள்ளுமாறு விபீஷணனை அனுப்பினான். அவனும் கும்பகர்ணனை அடைந்து, அடிபணிந்து "ஐயனே! எனக்கு இன்னருள் சுரந்த இராமவீரன் உனக்கும் அபயமளிப்பான்; மாயப்பிறவி நோய்க்கும் மருந்தாக அமைவான். எனக்கு அவன் தந்த இலங்கையரசும் செல்வமும் உனக்கு யான் தருவேன். ஆதலால், தீவினை புரியும் தமையனைத் துறந்து அற நெறியாய