பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

தமிழ் இன்பம்


பொய்யறியாப் புலவர்களால் புகழப் பெற்றவன். அவன் படைத் திறத்தைப் பாடினார் பானர்; கொடைத் திறத்தைப் பாடினார் ஒளவையார். இக் காலத்தில் சேலம் நாட்டில் தர்மபுரி என வழங்கும் தகடூர், அவன் கடிநகராய் இருந்தது. அவ்வூருக்கு அருகே அதிகமான் ஒரு கோட்டை கட்டினான். அஃது அதிகமான் கோட்டை என்று பெயர் பெற்றது. இந்நாளில் அதமன் கோட்டை என வழங்குகின்றது. இன்னும், கெடில நதியின் வடகரையில் அமைந்த திருவதிகை என்னும் பாடல் பெற்ற பழம்பதியும் அதிகமானோடு தொடர்புடையதாகத் தோற்றுகின்றது.

மற்றொரு பழந்தமிழ் வகுப்பார் பானர். பண்ணோடு இசைபாட வல்லவர் பானர் எனப் பட்டார். பாணரை, அக்காலத்துப் பெருநில மன்னரும் குறுநில மன்னரும் வரிசை அறிந்து ஆதரித்தார்கள். சோழ நாட்டின் தலைநகராய் விளங்கிய காவிரிப்பூம் பட்டினத்தில் பெரும்பானர் சிறத்து வாழ்ந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. யாழில் இசைபாடும் பாணர் யாழ்ப்பாணர் என்று பெயர் பெற்றார். சிவனடியார்களுள் ஒருவராகிய திருநீலகண்ட யாழ்ப் பாணர் இக்குலத்தவரே. திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களை யாழில் அமைத்துப் பாடி இவர் இன்புற்றார் என்று திருத்தொண்டர் புராணம் கூறுகின்றது. இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் என்ற நகரம் யாழ்ப்பானர் பெயரைத் தாங்கியுள்ளது.

இப்பொழுது இக் குலத்தார், தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், பழைய சேர நாடாகிய மலையாளத்தில், பாணர் குலம் இன்றும் காணப்படுகின்றது. ஒணத் திருநாளில் பாணர், தம்மனைவியருடன் சிறு பறையும் குழித்தாளமும்