பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39. பண்டாரப் பாட்டு

ஆன்ம வீரம், படை வீரத்தினும் பெரிதென்னும் உண்மையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே தமிழ் நாடு அறிந்துகொண்டது. நாடாளும் வேந்தரது மறப்படையையும் வெல்லும் ஆற்றல், அறப்படையை எடுத்து ஆளும் ஆன்ம வீரரிடம் உண்டு என்பது பண்டைத் திருத்தொண்டர் சரித்திரத்தால் நன்குணரப்படும். சைவ சமயத்தைத் தமிழ்நாட்டில் நிலை நிறுத்திய மூவருள் ஒருவராய திருநாவுக்கரசரை ஒரு சிறந்த ஆன்ம வீரராகக் கருதி, அவர் வாழ்க்கையையும் வாய்மொழியையும் பாரதியார் நன்கு உணர்ந்துள்ளார். மாநில வேந்தரது மறப்படையின் வலிமையை அறப்படையால் வெல்லலாகுமென்று ஆயிரத் திருநூறு ஆண்டுகட்கு முன்னரே உலக மக்களுக்கு அறிவித்தவர் திருநாவுக்கரசர். அவரது ஆன்ம வீரம் பாரதியார் உள்ளத்தில் புகுந்து உந்துவதாயிற்று.

இவ் வுலகில் புயவலியும் படைவவியும் படைத்தோரே வீரராகக் கருதப்படுகின்றனர். மேலை நாட்டில் படைச் செருக்குற்று வாழ்ந்த அலெக்சாண்டர், நெப்போலியன் முதலியோரை வீரராகக் கொண்டு போற்றுகின்றார்கள். புயவலியினும், படைவலியினும் பெரிய ஆன்மத் திறல் படைத்த வீரராகத் திருநாவுக்கரசர் விளங்கினார். சமண சமயத்தைக் கைவிட்டு அப்பெரியார், சைவ நெறியைச் சார்ந்த