பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. வேளாளப் பெருமக்கள் மகாநாடு[1]

திறப்புரை

பெரியோர்களே ! தாய்மார்களே !

பழம் பெருமை வாய்ந்த மதுரையம்பதியில் வேளாளப் பெருமக்கள் மகாநாடு இன்று நடைபெறுகின்றது. வேளாண்குல மாந்தர் பல்லாயிரவர் இங்கே குழுமி யிருக்கின்றார்கள். முன்னாளில், வேளாளர் குலம் இந்நாட்டில் மிக்க மேன்மையுற்றுத் திகழ்ந்தது. வேளாளருக்குரிய பயிர்த்தொழிலைப் புகழாதார் தமிழ் நாட்டில் எவருமில்லை. மேழிச் செல்வம் கோழை படாது" என்பது இந்நாட்டார் கொள்கை. மேழியே வேளாண்மையின் சின்னம். அம்மேழிக்கொடி இந்த மகாநாட்டுக் கொட்டகையில் அழகுற மிளிர்கின்றது. அதனை 'வாழி வாழி!' என்று வாழ்த்துகின்றோம்.

முன்னொரு காலத்தில் தமிழ் நாட்டிலே ஒரு திருமணம்; மன்னரும் முனிவரும், பாவலரும் நாவலரும், குடிகளும் படைகளும் மணமாளிகையில் நிறைந்திருந்தார்கள். ஒளவையாரும் அங்கே வந்திருந்தார். மன்னன் திருமகனே மணமகன். மணம் இனிது முடிந்தது. மங்கல வாழ்த்துத் தொடங்கிற்று. முனிவர் ஒருவர் எழுந்தார்; 'மணமக்கள் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!' என்று வாழ்த்தினார். 'இளவரசு வாழையடி வாழையென வையகத்தில் வாழ்க' என்று


  1. 1-6-1947-இல் மதுரையில் நடைபெற்ற மகாநாடு இது.