பக்கம்:தமிழின எழுச்சி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

100 • தமிழின எழுச்சி

பெற்றவருமாகிய திரு. அருட்செல்வர் என்னும் கருணாநிதியின், தனிப்பட்ட ஒரு சில தவறுகள் கட்சியின் தவறுகளோ, கொள்கையின் தவறுகளோ அல்ல என்பது சிறிதே எண்ணிப் பார்ப்பார்க்கும் நன்கு புலப்படுவதாகும். மேலும், அவை போன்ற தவறுகள் கடந்த காலங்களில் செய்யப்படவில்லை என்று அவர்களே சொல்லிவிட முடியாது. இன்னும், அத்தவறுகளுக்கும் தங்களுக்கும் எவ்வகைத் தொடர்புமே இல்லை என்பதாகவும் தங்களை விலக்கிக்கொள்ள முடியாது. இனி, அத்தவறுகளைப் போன்றவை வேறு எந்த அரசியல் கட்சிகளிலும் நிகழவே இல்லையென்று முடிவு கட்டிவிடவும் முடியாது. இனி, தாங்கள் விலகி வேறொரு கட்சியை அமைத்துக்கொண்டால் மட்டும், அவை போன்ற தவறுகள் கலைஞர் நின்றியக்கும் தாய்க்கட்சியில் இனி நடக்கவே நடக்காது என்றோ, தாங்கள் தொடங்கிய புதுக்கட்சியில் அத்தகைய தவறுகளுக்கு வாய்ப்பே இருக்காது என்றோ உறுதி கூறவும் அவர்களால் இயலாது. இத்தனை வலிவற்ற கரணியங்களின் அடிப்படையிலும் இனி எந்தத் தவறுகள் எவரால் எந்தக் கட்சியில் நிகழக்கூடாது என்று இவர்கள் கூறுகிறார்களோ, அந்தத் தவறுகள் மேலும் மேலும் அவராலேயே எவ்வகைத் தடுப்பாற்றலும் இன்றி எடுப்பாகச் செய் வதற்கு இயைபாக திறப்பு வழியை அமைத்துக் கொடுத்தது போலும் - அவரை அங்கேயே விட்டுவிட்டுத் தாங்கள் மட்டும், அக்கட்சியை விட்டுவிலகி வெளிவந்து விடுவது அரசியலறிவும் ஆகாது; இனமானம் காத்ததும் ஆகாது என்பதைத் திட்டவட்டமாக அவர்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

இனி, தமிழர்கள் அனைவரும் ஒரே மொழி, இன, அரசியல் எதிர்ப்புக்கும் சூழ்ச்சிக்கும் ஆட்பட்டவர்களே! அவர்களின் போக்குகள் கால, இட, அறிவு, வாய்ப்பு மாறுபாடுகளால் எப்படித் திரிபுற்றிருப்பினும், அவர்கள் அனைவரின் தன்மானச் சீரழிவுகளும் ஒன்றே! ஒரு சிலர் மாற்றானுக்கு அடிமைப்பட்டிருப்பதாக உணர்ந்தும் அந்நிலைக் காட்பட்டிருக்கலாம்; பலர் அவ்வாறு அடிமைப் பட்டிருப்பதைப் பல்வேறு அறியாமை நிலைகளால் இன்னும் உணராமல் இருக்கலாம்! அதற்காக அவர்களின் அடிமை நிலை என்பது இல்லாமற் போய்விடாது. இந்நிலையில் நமக்கு வாய்ப்பாக அமைந்த ஓர் இனப் போராட்டப் பேரியக்கத்தை, நமக்குப் பிடிக்காத ஓரிரண்டு நடைமுறைத் தவறுகளைக் கரணியங்காட்டி அதன் கட்டுக்கோப்பை உடைத்துக்கொண்டு வெளியேறுவதென்பது, ஒன்றால் வரலாற்றறிவற்ற, முழு அறியாமையாகும், அன்றால் தன்மானம் கருதிய முழுத் தந்நலமாகும். அடுத்து, இவர்களோ, இவர்களைச் சார்ந்தவர்களோ இதேபோன்ற தவறுகளைச் செய்யவே மாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி,