பக்கம்:தமிழின எழுச்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10 . தமிழின எழுச்சி

முன்னேறுவதே ஒரு நாட்டின் நிறை முன்னேற்றம் அன்றி அறிவியலில் மட்டுமே முன்னேறுவதோ, பொருளியலில் அல்லது உளவியலில் மட்டுமே முன்னேறுவதோ குறை முன்னேற்றம் என்றும் கண்டு கொள்க.

அறிவியலில் மட்டுமே முன்னேறும் நாடு ஒரு பெருஞ்சாலை போன்ற தென்றும்: பொருளியலில் மட்டுமே முன்னேறும் நாடு, ஒரு காடு, மலை போன்ற தென்றும்; உளவியலில் மட்டுமே முன்னேறும் நாடு, ஒரு அறச்சாலை அல்லது பள்ளியைப் போன்ற தென்றும் கூறலாம். இனி மூன்றாலும் முன்னேறும் நாடே கல்வி வளமும் இயற்கை வளமும், தொழில்களும் நிரம்பிய முழுமை நாடென்னலாம்.

இந்த அடிப்படை உண்மைகளை வைத்துக் கொண்ட செந்தமிழ் மணக்கும் நந்தமிழ் நாட்டின் முன்னேற்றத்தினையும்; அம் முன்னேற்றத்திற்குத் தடைக் கற்களாக அமைந்துள்ளவை எவை என்பதனையும் ஆராய்ந்தறியலாம்.

முதற்கண் அறிவியற்றுறையில் நம் நாடு எள்ளின் மூக்கத் துணையும் முன்னேறவில்லை என்பதை ஓர்ந்துணர்வார் தெற்றென அறிதல் கூடும். அறிவியலுக்கே பெருந்தடையாக உள்ள சமய நம்பிக்கைகளும், மூடக் கொள்கைகளும் உலகத்தின் எப்பகுதியைக் காட்டிலும் இத் தமிழ்த் திருநாட்டில் பெருநோய்களாகப் பரவியிருக்கின்றன. இவற்றில் அழுந்தி முன்னேற முயன்று வாழ்வை அமைத்துக் கொண்டவர், நூற்றுக்குப் பத்துப் பெயரே. இவர் அடைந்த கல்வி ஆகா. ஆகையால் அறிவியல் துறையில் நம் முன்னேற்றத்திற்கு முழுப் பெருந்தடைக் கற்களாக உள்ளவை, சமய வெறியும், அவற்றால் நாம் கொண்ட மூட நம்பிக்கைகளுமே.

நம் நாட்டினும் மிகுந்த சமயப் பற்றுடையார் மேனாட்டாரில் உள்ளனரே என்று மாற்றங் கூறுவார். அந் நாட்டாரின் சமயப் பற்று எண்ணங்களை மட்டுமே மழுக்குமென்றும், இந் நாட்டாரின் சமயப் பற்று அறிவையும் மழுக்குகின்ற தென்றும் ஆய்ந்தறிதல் வேண்டும். அதுவன்றிப் பொருளியலில் நாம் முன்னேறாதிருப்பதற்குப் பெருங் காரணங்களாக விருப்பன, அரசியலார் இயற்பொருள் நாட்டத்தை விட்டு, ஈட்டுப் பொருள் நாட்டத்தை வேட்டனர் என்பதும், மக்களும் வளர் பொருள் தழுவலை விட்டுத் தளர் பொருள் நோக்கி வழுவினர் என்பதும் ஆகும்.

இந்நிலை இவ்வாறே அமையுமானால் குடிமக்களெல்லாம் முதலைத் தின்று, வாணிகஞ் செய்யும் முழுமுடம் பெற்றவனைப்