பக்கம்:தமிழின எழுச்சி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 109

கொள்கிறோம்! 'ஒல்லும் வாய் எல்லாம் வினைநன்றே' என்னும் வள்ளுவர் வாய்மொழியைப் போற்றிக் கொள்ளும் திறலாண்மை யுடையவர் கலைஞர் என்பதை நாம் நன்கு அறிவோம். மேலும், இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும்' என்னும் பொய்யாமொழியும் கலைஞர்க்குப் புதியதன்று!

இனி, அரசியல் என்பது ஒருவகையில் பள்ளம் படுகுழிகள் நிறைந்த முட்காடு போன்றது. அதனுள் நுழைந்து அதனைத் திருத்தி யமைத்து, மக்கள் வாழும் நன்னிலமாகச் செய்யப் புகும் முயற்சி எளிதன்று. அவ்வாறு புகுந்தபின் அதன் இழிவு இறக்கங்களில் சொற்சோர்வும், வினைச்சோர்வும் கொள்ளாமல், கால்களில் முள்தைக்கையில், முள்ளை முள்ளால் களையவும், மேட்டைச் சிதர்த்துப் பள்ளத்தில் இட்டு நிரப்பவும் தெரிந்து கொள்வது ஓர் அரிய மனவியற் கலையாகும். அக்கலையெல்லாம் கைவரப் பெற்ற ஓர் அருங்கலைஞராகிய நம் அருட்செல்வனார், ம.கோ.இரா. தாம் செய்யத் தவறிய செயல்களையெல்லாம் செய்து புகழ் பெற்று விடுவார் என்னும் உளத்துணுக்குக்கும் உணர்வுக் குமுறலுக்கும் இடம் வையாமல், தாம் செய்யாதனவற்றை இவரேனும் செய்கின்றாரே என்னும் பெருந்தகைமை கொண்டு போற்றிப் பெருமை செய்வது, அவர்மேல் இன்றைய முதலமைச்சர் கொண்டதாகக் கருதப்பெரும் பொறாமை யுணர்வையும் பகையுணர்வையும் அடியோடு போக்க உதவும் ஒரு நற்செயலாக அமையும் என்று கருதுகின்றோம். 'இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம்' என்னும் பெரும்புலவரின் அரும்பொருள் நூற் கருத்தைக் கலைஞர் போற்றிக் கொள்வாரென்று நம்புகின்றோம். எதிரும் புதிருமாக வீற்றிருந்து அரசாளப் புகுந்த இவ்விரு தலைவர்களின் மேலாளுமையில் நம் இனமும் மொழியும் நாடும் செழித்து வளர்வதாகுக! பிறபின்.

தென்மொழி சுவடி - 14, ஓலை - 3 சூலை - 1977