பக்கம்:தமிழின எழுச்சி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

118 • தமிழின எழுச்சி


எப்படி? கருத்தரங்கின் நோக்கம் நன்கு விளங்குகிறதா? 'வருணாச் சிரம தருமங்களை' மீண்டும் தூக்கி நிலை நிறுத்தி, அவற்றினை வலியுறுத்தும் புராண இதிகாசங்களுக்கு வரலாற்று வலிவையூட்டி, அவற்றை இவ்விந்திய நாட்டு மக்களிடையில் மீண்டும் நிலைநாட்டுவதே இக் கருத்தரங்கைக் கூட்டியவர்களின் - அவர்களின் பின் நிற்பவர்களின்- நோக்கமாக இருத்தல் வேண்டும் என்பதற்கு இவற்றைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. இவர்களைப் போன்றவர்களின் இத்தகைய கருத்துகள் எத்தனையோ மேலைநாட்டு, நம் நாட்டு, அறிஞர்களால் தூள்தூளாக்கப்பட்டுள்ளன. இவர்கள் இப்பொழுது மீண்டும் கூடி, அவற்றிற்கு உயிர்ப்பூட்ட முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர்.

இனி, இக் கருத்தரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரைகளில் தமிழ் மொழிக்கு பெருமை தருவதுபோல் சில கருத்துகளைக் கூறி அதற்கு மேல் சமசுக்கிருதத்தைத் தூக்கி உயர்த்தி வைத்துள்ளனர். அதுபற்றிய கருத்துகள் வருமாறு.

"Tamil always kept up its seperate identity and was verity the younger sister of Sanskrit. If Sanskrit was 10000 years old, Tamil is now 8000 years old.

(தமிழ்மொழி எப்பொழுதும் தன் தனித்தன்மையையும் சமசுக் கிருதத்திற்குத் தான் தங்கை என்பதையும் கட்டிக்காத்து வருகிறது. சமசுக்கிருதம் பத்தாயிரம் ஆண்டு முதுமையானதென்றால் தமிழ் எட்டாயிரமாண்டு முதியது.)

'The coexistence of Sanskrit and Tamil for over 8000 years. This appears to essential to establish the homogenity of our Bharatiya culture of which Sanskrit and Tamil are but the two ancient inseparable segments'

(சமசுக்கிருதமும் தமிழும் 8000 ஆண்டுகளாகவே ஒத்து வாழ்ந்த தன்மையுடையவை. சமசுக்கிருதம், தமிழ் என்னும் இவ்விரண்டும் பழமையான பிரிக்கமுடியாத கூறுகள், பாரதியப் பண்பாட்டை நிலைநாட்டுவதற்கு இன்றியமையாதவை என்று தோன்றுகிறது.)

- இத்தகைய கருத்துகள், “நீ அரிசி கொண்டு வா; நான் உமி கொண்டுவருகின்றேன். இரண்டையும் கலந்து இருவரும் ஊதி ஊதித் தின்னலாம்” என்னும், ஏமாற்றைப் புலப்படுத்தும் பழைய கதைப் பழமொழியை நினைவூட்டுகின்றன. ஐம்பதினாயிரம் ஆண்டுகட்குமுன் தோன்றிய தமிழ்மொழி எங்கே, அந்தத் தாய்மொழியினின்று கி.மு.2500 வாக்கில் தோற்றுவிக்கப் பெற்ற சமற்கிருதமெங்கே. இரண்டையும் ஒன்றாக இணை வைத்து, பின்தோன்றிய செயற்கை மொழியாகிய சமசுக்கிருதத்தின் தங்கையாக முன்தோன்றிய இயற்கை மொழியாகிய