பக்கம்:தமிழின எழுச்சி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

122 • தமிழின எழுச்சி

முன்னைய கால வரலாற்றில், தெரிந்தோ தெரியாமலோ இழந்துபோன தன்மானம், தன்னுணர்வு, தன்னறிவு இவை ஏற்பட்டுத், தன் தாய்மொழிச் சிறப்பு, தன் பெருமைமிக்க ஆட்சி வரலாறு, இழந்துபோன பண்பாடு, அழிந்துபோன கலைகள், அரசியல் உரிமை, குமுகாயப் பொதுமை ஆகிய அத்தனை நிலைகளையும் மீட்டுக்கொண்டு முன்னேறிப் பெருமித நடையிட வேண்டும் என்னும் பேராசை எனக்கு! அதனால் சிலவற்றைத் துணிந்து, பச்சையாகவே, ஆனால் அடக்கத்தோடு, மிக்க பண்பாட்டோடு எழுத முன்வந்துள்ளேன். அறிஞர்களும் அரசியல் தலைவர்களும்கூட என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகின்றேன். ஏனெனில் நான் காட்டப்போகும் கதை, வரலாற்று நிகழ்ச்சிகளில், ஒருவேளை, அவர்களோ, அவர்களுக்கு நெருங்கிய அன்பர்களோ, அல்லது அவர்கள் வழிபட்டுவரும் தலைவர்களே, அல்லது அவர்களைப் போன்றவர்களோ கூட நடமாடலாம்; நடிப்பதைப் பார்க்கலாம். அதற்காக அவர்கள் மனம் வருந்தக்கூடாது. அப்படிப்பட்ட ஒரு நிலையை இப்படி வெளிப்படையாகக் கொணர்ந்ததற்கு என்னைப் பொறுத்துக் கொள்ளவே வேண்டும். ஏனெனில், என் தன்மானத் தூவலினின்று வடியும் எழுத்துகள், வேறு எவரையும் தாக்குவதற்குமுன், எவர்க்கும் அறிவுறுத்துவதற்குமுன், என்னைத் தாக்கிவிட்டு - எனக்கும் அறிவுறுத்திவிட்டு - இன்னுஞ் சொன்னால் எனக்கும் எச்சரித்து விட்டுத்தான் அச்சேறி வெளியில் வரும். அப்படிப்பட்ட தன்மையது அது; எனக்கும் கட்டுப்படாதது! இனி, இக்கட்டியங்கார முன்னுரைப் புலம்பலை இத்துடன் நிறுத்திக் கொண்டு, செய்திக்கு வருகின்றேன்.

நம் தமிழர்கள் நடத்தும் கடந்த கால அரசியல் போராட்டங்களை மிகவும் கூர்ந்து கவனித்துக் கொண்டு வருகின்றவன் நான். அவற்றில் தான் எத்தனைப் போலித்தனங்கள்! எத்தனைப் பொய்யுரைகள்! புளுகுரைகள்! அப்பப்பா! இப்படியே போனால் தமிழினந்தான் என்றைக்கு விடிவது? தமிழர்கள்தாம் என்றைக்கு முன்னேறுவது? அவர்கள் நடத்தைகளில்தாம் எத்தனை இழிவுகள்! எத்தனைத் தாழ்ச்சிகள்! இந்த வகையில் அறிந்தோ அறியாமலோ 'தேசியம்' பேசித் திரிகின்ற வடநாட்டானுக்கு வால்பிடிக்கும் அடிமைத் தலைவர்களைப் பற்றி நான் துளியும் கவலைப்படவில்லை . வடவர் வீசியெறிகின்ற உணவுத் துணுக்குகளையும், காசுத் தூசுகளையும், கந்தல் கழிசடைகளையும் பொறுக்கி உண்பதற்காகவும், உடுப்பதற்காகவுமே தேசியம் பேசுகின்ற அக் குட்டித்தலைவர்களையும், வீடணப் பிரகலாதன்களையும்கண்டு நான் மனஞ் சலிப்படையவில்லை. ஆனால், நம் இனத்தலைவர்கள் என்று கூறிக்கொண்டு, நம் மக்களையே சுரண்டித் -