பக்கம்:தமிழின எழுச்சி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 131


மாறுபட்ட, முரண்பாடுற்ற இலக்கியப் போக்குகள் மொழிவழி ஏற்படுகின்ற பண்பாட்டு நலன்களையும் கலை நலன்களையும் சிதைத் தழிப்பதுடன், உலக அரங்கில் நம் இலக்கிய வளர்ச்சிக்கும் பெருங்கேடாகவே ஆகின்றன. வேண்டுமென்றே அக்கறையற்ற, பொதுநலம் காவாத இலக்கியக் கொள்கையாளர்கள் சிலர், மேனாட்டு பாணிகள் என்ற வகையில், நம்முடைய உயர்ந்த பண்டைய இலக்கியப் போக்குகளை இளைஞர்களிடையே திசைமாற்றம் செய்து வருவது மிகவும் வருந்தத்தக்கதாய் இருக்கிறது. இவற்றைத் தடுத்து நிறுத்தும் முயற்சிக்கு அரசினரின் மாறுபட்ட, அல்லது வேறுபட்ட கொள்கைகளால், ஆதரவு கிடைப்பதில்லை. 'டாடி டாடி', 'பேட்டா பேட்டா' என்ற திரைப்படப் பாட்டெழுதும் மொழிநலம் பேணாத முருங்கைகளையே, பாவேந்தர் பரம்பரைப் பாவலர் எனத் தேர்ந்தெடுத்துப் பத்தாயிரம் உருபாப் பரிசில்களும் வழங்கி சிறப்பிக்கின்றனர். இந்த நிலைகள் மிகவும் இரங்கத் தக்கனவாகவும், வருந்தத்தக்கனவாகவும் இருக்கின்றன. இவற்றுக்காகக் கவலைப்படும் ஒருவரைக்கூடத் தமிழ்வளர்ச்சித்துறைகளில் காண முடிவதில்லை.

தமிழ் வளர்க்கின்ற தமிழறிஞர்களும், தமிழாசிரியர்களும் புறக்கணிக்கப் படுகின்றனர். தமிழர் நலம் பேணுகின்ற கட்சிகளும், தலைவர்களும் பல்வேறு வகையில் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். உரிமைக்கும் நேர்மைக்கும் ஒரு துளியும் மதிப்பில்லை. ஒழுக்கம் தேவையற்ற நடைமுறையாகவும், கொள்கையுறுதி வேண்டாத ஓர் உணர்வாகவும் கருதப்படுகின்றன. குரங்கு கையின் பூமாலையாக நாடு சிதைக்கப்படுகிறது. நலிந்திவர்கள், மெலிந்தவர்கள், வலிந்த வஞ்சகர்களால் துன்புற்று வாடுகின்றனர். எந்த ஒரு கொள்கைக்கும் பெரும்பான்மை மக்களிடம் பிடிப்பு இருப்பதில்லை .

இவ்வாறு அறிவுக் கூறுகள் அனைத்திலுமே தமிழினம் சிதைக்கப்பட்டுக் கீழ்மையுறுகின்றது. அரசியல் என்னும் பெயரால் தமிழினத்தைக் கூறுபோடும் முயற்சிகளே நடந்து வருகின்றன. ஒருவரை யொருவர் அழிப்பதையே அரசியலாகக் கருதுகின்ற போக்கு நாட்டைக் கவ்வியுள்ளது. இவ்வழிநிலைப் போக்குகளின் இழிநிலைப் போக்குகளினின்றும் நாட்டையும் இனத்தையும் மீட்டெடுக்க வல்ல ஓர் ஒட்டுமொத்தமான முயற்சிகளுக்கு வரும் ஆதரவு குறைவாகவே இருக்கிறது. பொருளுதவிகளும் போதுமானவாக இல்லை. இந்த நிலைகளெல்லாம் மிக அண்மைக் காலத்திலேயே சரிப்படுத்தப் பெற்றுவிடும் என்னும் நம்பிக்கை நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. மொழி, இன, நாட்டு நல முயற்சிகளில் ஈடுபட வேண்டிய