பக்கம்:தமிழின எழுச்சி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

144 • தமிழின எழுச்சி

கொடுமை வாய்ந்ததாக உள்ளதால் எவ்வாறேனும், தமிழின மக்களைத் தட்டியெழுப்பி, அக்கொடுமையிலிருந்து தம்மை மீட்டுக்கொள்ள, விடுவித்துக்கொள்ள, மக்கள் தழுவிய ஒரு போராட்டத்தை இத் தமிழ்நாட்டிலும் தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான். நம் முன்னணித் தலைவர்கள் ஒவ்வொருவரும் பெரும் பெரும் முதலாளிகள், ஆகிவிட்டார்கள். அச் செல்வப் பெருக்கம் அவர்களைக் கோழைகளாகவும், அச்சமுள்ளவர்களாகவும் ஆக்கியிருக்கிறது. விடுதலைப் போராட்டம் போன்ற உயிரீகப் போராட்டங்களில் ஈடுபட் டால், எங்குத் தாங்கள் தங்கள் உடைமைகளை இழந்து விடவேண்டி யிருக்குமோ என்று அஞ்சிச் சாகிறார்கள். ஆனாலும் மக்களிடத்தில் உள்ள தங்கள் சாய்காலும், தங்கள்மேல் அவர்கள் வைத்த நம்பிக்கையும் போய்விடக்கூடாதே என்பதற்காக, அவர்கள் ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் தமிழ்மொழியைப் பற்றியும், தமிழ் இனத்தைப் பற்றியும், பேசித் தங்கள் பதவி, அதிகாரத்திற்குத் துணைவராத தில்லி ஆட்சியைப் பற்றியும் கண்டிக்க வேண்டி உள்ளது. மற்றபடி தில்லியாட்சி நாளைக்கே இவர்களின் பதவியாசை அங்காப்புகளுக்குத் துணை வருவதாக இருக்குமானால், இவர்களின் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்வரலாறு பற்றிய பேச்சு, அளவிலும் வலிவிலும், கோரிக்கைகளிலும் மிகமிகத் தாழ்ந்துவிடும். இவையெல்லாம் கடந்தகால நடவடிக்கைகளிலிருந்து நமக்குக் கிடைத்துள்ள பட்டறிவுகள். எனவே, இவர்கள் இனிமேலும் நம் மொழி இன, நாட்டுத் தேவைகளுக்கும் அவற்றின் விடிவுக்கும் பயன்படுவார்கள் என்று நம்பிக்கிடப்பது நம் கோழைத்தனத்தையும் அறியாமையையும் அடிமைத்தனத்தையுமே காட்டும். தமிழினம் தான் இழந்துபோன வரலாற்றையும் வரலாற்றுச் சிறப்பியல்களையும் மீட்டெடுக்க வேண்டுமானால், தமிழகம் தனியாக ஆட்சியமைப்பதே தக்கது.

திருவாட்டி இந்திராகாந்தி அம்மையார் தாம் மிகவும் வலிவுபெற்ற நிலையில், தம் இன ஆளுமையே என்றென்றும் இந்தியாவில் நடைபெறவேண்டும் என்பதற்கான அடிப்படைகளை மிகவும் தந்திரமான முறையில் ஏற்படுத்தி வருகிறார். தமிழ்மொழிச் சிறப்பியல்கள் சமசுக்கிருதமொழிச் சிறப்பியல்களாக மாற்றப்பட்டு வருகின்றன. தமிழ்க்கலைகளின் வடிவங்கள் முழுவதும் ஆரியக் கலைகளாக மெருகுதீட்டப் பெற்றுவருகின்றன. தமிழரின் பண்பாடுகள் ஆரியப் பண்பாடுகளாகச் சமைத்து, உலகெங்கும் பரப்பப்படுகின்றன. தமிழரின் வீரவரலாறுகள் கரவாக மறைக்கப்படுகின்றன. (இதற்கோர் எடுத்துக்காட்டு அண்மையில் நடந்த நிகழ்ச்சியை வைத்தே காட்டலாம். இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த இராசஇராசன் விழாவில் அம்மை