பக்கம்:தமிழின எழுச்சி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

150 - தமிழின எழுச்சி


ஆம். இனி, அரசியல் பதவி உங்களுக்கு எதற்கு? அரசியலால் எதை விளைவிக்கப் போகிறீர்கள்? உங்கள் அரசியல் போராட்ட உணர்வை, முற்றும் இனநலப் போராட்டத்திற்கும், தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்திற்குமாக வெளியறிவிப்புச் செய்யுங்கள். (பிரகடனப் படுத்துங்கள்) உங்கள் கையிலுள்ள 'முரசொலி’யைப் போர் முழக்கமாக முழங்கச் செய்யுங்கள். இனி, நீங்கள் கட்டாயம் இழந்துபோன அரசியல் பதவியை மீட்க முடியாது; மீட்கவே இயலாது. அஃது ஒரு மாயை! அஃது ஒரு சேற்றுக்குழி! அதனால், இப்பொழுதுள்ள கொடுமையான சூழலில், தமிழினத்திற்கு விடிவுகாண முடியாது,

'தமிழினத் தானைத்தலைவன்' என்று உங்களைக்கூறிவரும் கூற்றை, இனியாவது மெய்ப்பிக்கப் பாடுபடுங்கள். எங்களுடன் களத்தில் இறங்குங்கள். நாங்கள் உங்களுக்குத் தோளொடு தோள்கொடுத்து உதவுகின்றோம். தமிழின விடுதலைப் போருக்குத் தலைமை தாங்குங்கள். அக்கால் உங்கள் மேலிருக்கும் அரசியல் காழ்ப்பெல்லாம், பகையெல்லாம் சுக்குநூறாகிப் போகும். உங்கள் முயற்சியில் தோல்வி ஏற்பட்டாலும், அஃது உங்களுக்கு வெற்றியே! தமிழக விடுதலைப் போர் தொடங்கப்பட வேண்டிய காலம் இதுவே! தோல்வியால் துவண்டு கிடக்கும் உங்கள் நெஞ்சாங்குலை, அதனால் விரிவடையும்! எழுச்சிபெறும். அஞ்சுதல் வேண்டா. சிறைக்குப் போக வேண்டியிருக்குமே என்று உள்ளம் செகுக்க வேண்டா. நிமிர்ந்து நில்லுங்கள். கூனிப் போயிருக்கும் இத் தமிழினத்திற்காக, உங்கள் எண்ணங்கள் உதவட்டும்! எழுத்துகள் போர்ப்பரணி பாடட்டும்! உங்கள் அரிய உழைப்பு நீராக வந்து பாயட்டும்! உலகத் தமிழின முன்னேற்றத்திற்காக முனைந்து நிற்கப் போகும் உங்கள் துணிவை வரலாறு பாராட்டும்! எம் போலும் எதிர்காலப் பாப்புலவர்கள் என்றும் புகழ் அழியாத புதுப் புறநானூற்றை உருவாக்கட்டும்!

நம்மை அடக்கியாளும் தில்லி அரசு வலுத்து வருகிறது. தேசியம் என்றும் ஒருமைப்பாடென்றும் பேசி, அது நம் இனிய தமிழ்மொழியையும், தமிழினத்தையும், இந்திமொழியிலும், ஆரிய இந்தியத் தேசியத்திலும் கரைத்துவிடப் பார்க்கிறது. இந்தநிலை இப்பொழுதே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அல்லாக்கால், இனம், நம் ஒப்புயர்வற்ற தமிழினம், இனி, மெல்லமெல்ல, பாரதம் என்னும் நாடோடி ஆரியப் பண்பாட்டில், உருத்தெரியாமல் சிக்கிச்சிதைந்து போகும்! இஃதொரு பெரிய எச்சரிக்கைக் காலம். நாம் இன்று விழித்துக் கொள்ளவில்லையானால், வடநாட்டு ஆரியக் கசண்டர்களிடம் சிக்கிச்சீரழிந்துபோவது மெய். மூப்பன்களும், பழனியாண்டிகளும், சிவாசிகணேசன்களும்,