பக்கம்:தமிழின எழுச்சி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 151

தங்கள் பண நலத்தையும் பதவிநலத்தையும் காத்துக்கொள்ள, நம் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், இனத்தின் மேம்பட்ட வரலாற்றையும் காந்திக் குடும்பத்தாரிடம் காட்டிக்கொடுக்க, அடகுவைக்க, கொத்தடிமைப்படுத்த, உறுதிமுறி எழுதிக்கொடுக்க, இறுதிப் பட்டயம் அடித்துக் கொடுக்கத் துணிந்து விட்டார்கள்.

எனவே, உங்கள் கையிலுள்ள எழுதுகோலைத் தமிழக விடுதலைப் பண் எழுதப் பயன்படுத்த வாருங்கள். உங்கள் நெஞ்சாங்குலையின் ஒவ்வொரு துடிப்பிலும், தமிழ்த் தேசிய விடுதலைப் பண் இசைக்க விடுங்கள்! தனிப்பட்ட என்மேலுள்ள வெறுப்பை உமிழ்ந்து விடுங்கள்! என் செயல்கள் மேலுள்ள, பொறுத்துக் கொள்ளாத கசப்புணர்வை, வெறுத்து ஒதுக்கி விடுங்கள். நான் உங்கள் தோழன்! உங்கள் இனநல முயற்சிக்குத் துணை நிற்பவன். இப்படியொரு துணை, காலத்தால், உங்கட்குக் கிடைப்பது அரிது. உங்கள் தமிழக விடுதலை முழக்கக் குரல் கேட்கின்ற, அதே நொடியில், நான் உங்களிடம் ஓடோடி வருவேன்: உங்கள் உணர்வோடு உணர்வாக ஒன்றிவிடுவேன்! எனக்கு என் தனி மானம் பெரிதன்று; தமிழ்மானமும் தமிழ்நாட்டு மானமுமே பெரியது! பெரிது! நம் எதிர்கால இனவரலாற்றின் விடுதலை வெற்றி உங்களுக்கே ஆகட்டும்! வெல்க தமிழினம்! வாழ்க தமிழ்நாடு! விளங்குக தமிழ் மொழி உலகமெலாம்! இஃது நான் உங்கட்கு எழுதும் இறுதிமடல்! இதற்கு ஓர் உறுதி வேண்டும்.

நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல். (குறள் - 1026)

இங்ஙனம்

கருமம் செயக் கைதூவா நிற்கும் ஒருவன்

தென்மொழி சுவடி - 21, ஓலை - 3 திசம் - 1984, சனவரி - 1985