பக்கம்:தமிழின எழுச்சி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

154 • தமிழின எழுச்சி

என்றும் தில்லிக்கும் சென்னைக்கும் கொழும்புக்கும் பறந்து சென்றும், வெளிநாடுகளுக்குப் போய் வந்தும், தமிழீழப் போராட்டத்தையும் அங்கு விழுந்த தமிழர் பிணங்களையும் முன்வைத்து, வேண்டிய அளவு பணங்களைத் தலைக்குத்தலை தம் சட்டைப்பைகளில் நிரப்பிக் கொண்டபின், இப்பொழுது வீரம் பேசி என்ன பயன்? இந்த இடைக் காலத்தில் செயவர்த்தனனும், அதுலத்முதலியானும், நாடுநாடாகப் போய் அரசு அரசாகக் கேட்டுக், கருவிகளையும் காரணங்களையும் பெருக்கியும் வலுப்படுத்தியும் கொண்டான்களே! இப்பொழுதுதான் இவர்களுக்கு அறிவு தெளிந்ததோ? உண்மை விளங்கியதோ?

இனி, இந்திரா போய், இராசீவ் வந்த நிலையில்தான் என்ன நடந்துவிட்டது? தாய் போன அதே வழியில்தான் தனயனும் போகிறார்! அண்மையில் இந்தியா வந்த அதுலத்முதலியானிடம், இராசீவ் பேச்சுரை நடத்திய படங்கள் செய்தித்தாள்களில் வந்ததை அனைவரும் பார்த்திருக்கலாம். இருவர் முகங்களில்தாம் எத்துணைக் களிப்பு! பெருமிதச் செருக்கு! கூர்ந்து பார்த்தவர்களுக்கு விளங்கியிருக்கும்! - அவர்களின் முயற்சி அவர்களின் முகங்களிலேயே தெரிந்ததே!

இந்தியக் கடற்கரைப் பகுதிக்குள் தாறுமாறாக நுழைந்து வந்த கருவிகள் நிறைந்த இலங்கையின் படைத்துறைப் படகை, ஏதோ, பிடிப்பதுபோல் பிடித்து, எச்சரிப்பதுபோல் எச்சரித்து, விடுவிப்புச் செய்ததும், போர்ச்சுகல்லிலிருந்து, பல்லாயிரக்கணக்கான உருபா மதிப்புள்ள போர்க் கருவிகளைத், தமிழர்களை அழித்தொழிக்க, இலங்கைக்கு எடுத்துச்சென்ற சரக்கு வானூர்தி எதிர்பாராத வகையில் திருவனந்தபுரத்தில் இறங்க, அதனால் பெரும் விளைவை ஏற்படுத்திவிடலாம் என்று எண்ணிய அதிகாரிகள், அதனைப் பிடித்துவைத்துச் செய்தியைக் தில்லிக்கு அனுப்ப, அதனை நோகாமல், நொடியாமல், கன்னெய் (பெட்ரோல்) நிரப்பி, இவற்றையும் கொண்டுபோய்த் தமிழர்களைச் கட்டுப் பொசுக்குங்கள் என்று கூறாமல் கூறியபடி, அதனை உடனே விடுவிப்பச்செய்த இராசீவ் காந்தியின் செயலும் எதைக் காட்டுகின்றன? தாய்க்குத் தனயன் தப்பாமல் பிறந்திருக்கின்றான் என்பதையன்றோ? இவற்றின் உள்ளார்ந்த சூழ்ச்சிகள், உளவுகளை அறிந்து கொள்ளாமல், இன்னமும் இராசீவ் காந்திக்குத் தொலைவரி அடிப்பதும், அறிக்கைகள் விடுப்பதும், தீர்மானங்கள் போடுவதும், விழுந்தடித்துக்கொண்டு நேரே தில்லிக்குப் பறப்பதும் வீணான செயல்கள் அல்லவா? இவற்றுக் கெல்லாம் விளைவு என்னவரும் என்று நமக்குத் தெரியாதா? இராசீவுக்கும், செயவர்த்தனேவுக்கும் எது நோக்கமாக இருக்க முடியும்? என்று நமக்குப் புரிகிறது! ஆனால் இங்குள்ள தலைவர்களின் நோக்கந்தான் நமக்குப் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது.