பக்கம்:தமிழின எழுச்சி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

166 • தமிழின எழுச்சி


அவ்வாறு தேர்ந்து கொண்ட இயக்கத்தை நடத்திச்செல்லும் முன்னோடியானவர், அல்லது அமைப்பாளர், அல்லது தலைவர் ஆகியவரின் அறிவாற்றல், அன்புணர்வு, கொள்கைப் பிடிப்பு, மக்கள்மேல் பற்று, சொல், எழுத்து, செயல் திறன்கள் பண்பு நலன்கள், ஈகம், ஈடுபாட்டுக் காலம், தன்னல மறுப்பு, பொதுநல ஏற்பு, குற்றமின்மை , குற்றங்கடியும் தன்மை, பதவியாசையின்மை, பொருள்நசையின்மை, உழைப்புத்திறன், கடந்தகால ஈடுபாடு, தனித்து முடிவெடுக்கும் ஆற்றல், பிறர் கொள்கையைத் தக்க அடிப்படைகளுடன் மறுத்தத் தன் கொள்கையை நிலைநாட்டும் தருக்கத் திறன், தொண்டர்களின் தகுதித் திறன் இவற்றைத் தேர்ந்து, அவர்களைத் தக்க வினைகளில் ஈடுபடுத்தும் ஆற்றல், தனக்கு மாறான இயக்க நிலைகளைப் பொறுத்து, அவற்றை நெறிப்படுத்துகின்ற வல்லமை, எதிரிகளின் வஞ்சகர்களின், இரண்டகர்களின் ஏசல், பேசல், இழிவு, பழிகளைப் பொருட்படுத்தாத இருமை ஏற்பு மனம், தோல்வி கண்டு துவளாத உறுதிப்பாடு, காலம், இடம் இவற்றைத் தேர்ந்து கருத்தறிவித்தல், செயலறிவித்தல் முதலிய அனைத்துச் சிறப்புத் திறன்களையும் ஆராய்ந்து, தம் அறிவு, மனம், உணர்வு, கொள்கை இவற்றுக்குப் பொருத்தமான ஒருவரைத் தம் வழி காட்டியாக அல்லது கொள்கைத் துணைவராக ஏற்றுக்கொண்டு, அவருடனும் அவர் இயக்கத்துடனும் தன்மை இணைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

இங்குதான் தொண்டர்கள் மிக விழிப்பாக இருத்தல்வேண்டும். மேலே கூறப்பெற்ற அனைத்துத் திறன்களும் பிற சிறப்புத் திறன்களும் ஏதோ அடுக்கிக் கூறப்பெற வேண்டும் என்னும் நோக்கில் கூறப் பெற்றவை அல்ல. அவை ஒவ்வொன்றும் நன்கு ஊன்றிக் கவனிக்கப் பெறவேண்டிய தலைமைக் கூறுகள். இவை ஒவ்வொன்றுக்கும் மிக முகாமையான தேவைகள் உண்டு. எனவே, இங்குக் கூறப்பெற்ற ஒவ்வொரு தனிச் சிறப்பும் மிக மிக இன்றியமையாதது. இவற்றுள் ஒன்றோ இரண்டோ குறையுமானால்கூட, தலைவர் ஒருவர்க்கு அல்லது கொள்கை வழிகாட்டிக்கு, அந்நிலை, சிறப்பிலதாகவே கருதப்பெற வேண்டும்.

இந்நிலைகளையெல்லாம் சரிவர எண்ணிப் பாராமல், அல்லது ஆய்ந்து பாராமல், திடுமென ஒரு தலைவரையும், அவர் இயக்கத்தையும் தாம் தேர்தலும், அவரொடு இணைதலும், இயங்குதலும் பின்னர் மாறுபாடாகத் தெரிந்துவிடத்து அவர்களை விட்டுத் தாம் விலகுதலும், எதிர்த்தலும், வேறு இயக்கங்களுடன் இணைதலும் அல்லது புதிதாகத் தாமே ஒன்றைத் தொடங்கிவிடுதலும் குழப்பங்களையும், இடர்ப்பாடு