பக்கம்:தமிழின எழுச்சி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

172 • தமிழின எழுச்சி

வாழ்க்கை நடத்துகின்றான். இதைத்தான் முழுநிலையில், 'புறம் கூறிப் பொய்த்து - உயிர் வாழ்தல்' என்று சுருங்கக் கூறுவார் திருவள்ளுவப் பேராசான், திருக்குறளில் 'அழுக்காறாமை'க்கு அடுத்து 'வெஃகாமை' யையும், அதனையடுத்துப் 'புறங்கூறாமை'யையும், அதையடுத்துப் 'பயனில சொல்லாமை'யையும், அதனையடுத்துத் 'தீவினையச்சத்' தையும் முறைப்பட வைத்துக்கூறும் பாங்கால், குமுகாயக் குற்றங்களின் பல வளர்ச்சிப் படிநிலைகளை விரிவாக உணர்த்துதலை நாம் நுணுகி உணர்தல் வேண்டும். குற்றத்தைவிடக் குற்றங்கூறும் மனப்பான்மையே பெரிதும் அஞ்சத்தக்கது; கடியத்தக்கது; தவிர்க்கத் தக்கது. ஓரிடத்தில் உள்ள இழிவை ஊர் முழுவதும் தெளிக்கின்ற அருவருப்பான பணியைப் புறங்கூறுபவர்கள் செய்கிறார்கள். நச்சுக்குச்சில் (பாக்டீரியாக்)களைப் போல் இவர்கள், நச்சுத் தன்மையை வளர்த்துக் குமுகாயத்தையே மனநோய்க் கூட்டமாக மாற்றுகின்றனர். புறங் கூறுகின்றவர்களை மிகுவாகக் கடிந்து கீழ்மைப்படுத்துகின்றார் திருவள்ளுவர்.

'நெஞ்சத்து அழுக்காறு உடையவன்' (161)
'பிறனாக்கம் பேணாது அழுக்கறுப்பவன் (163)
‘இழுக்காற்றில் ஏதம் (துன்பப் படுபவன்' (164)
‘கொடுப்பது அழுக்கறுப்பா' (166)
‘அழுக்காறு என ஒரு பாவி' (168)
'அவ்விய நெஞ்சத்தான்' (169)
'அழுக்கற்று அகலாதவன் (வளராதவன்)' (170)
‘நடுவின்றி (நாயமின்றி) நன்பொருள் வெஃகுபவன்' (171)
'பழிப்படுவ செய்பவன்' (172)
‘சிற்றின்பம் (சிறு இன்பங்களை வெஃகுபவன்' (173)
'இலமென்று வெஃகுபவன்' (174)
‘வெஃகி (பேராசை கொண்டு) வெறிய
(வெறித்தனமாக) செய்பவன்' (175)
'பொருள் வெஃகிப் பொல்லாத சூழ்பவன்
 (பொல்லாதவற்றையே எண்ணித் திரிபவன்) (176)