பக்கம்:தமிழின எழுச்சி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 173


'பிறன் கைப்பொருள் வேண்டுபவன்' (178)

'புறன்அழீஇப் (காணாதவிடத்துப் புறங்கூறிக்
கண்டவிடத்துப் பொய்யாக நகைப்பவன்' (183)

‘முன்னில்லாமல் பின்னாகப் பழிப்பவன்' (184)

'புறஞ் சொல்லும் புன்மை (புல்லிய தன்மையை)
உடையவன்' (185)

'பகச் சொல்லி (வேறுபடுத்திக்கூறு)க் கேளிர்
(நண்பர்களைப் பிரிக்கின்றவன்' (187)

'துன்னியார் (நெருங்கியிருந்தவர்) குற்றங்களைத்
தூற்றும் மரபினன் (வழக்கத்தைக் கொண்டவன்) (188)

'புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பவன்' (189)

'ஏதிலார் குற்றம்போலத் தன் குற்றத்தை காணாதவன்' (190)

‘பலரும் வெறுக்கும்படி பயனில்லாதவற்றையே
சொல்லுபவன்' (191)

‘பலர் கூடியவிடத்தெல்லாம் பயனிலாத
வற்றையே சொல்பவன்ன' (192)

'பயனில்லாதவற்றை (மிக விரித்து) பாரித்து
உரைப்பவன்' (193)

‘பண்பில்லாத சொற்களைச் சொல்லுபவன்' (194)

'மக்கள் பதடி (பதர்)' (196)

‘அரும் பயனை ஆராயும் அறிவில்லாதவன்' (198)

‘மயக்கம் தீராத மனமும் மாசுகள் நீங்காத'
அறிவும் உடையவன்' (199)

‘பிறர்க்குச் செய்யும் கேடுகளைப் பற்றியே ஆராய்பவன்' (204)

'பகையான உணர்வையே செயலாகச் செய்பவன்' (207)

'தன்னையே மிகுதியும் விரும்புகிறவன்' (209)

'அறம்பிறழ்ந்து பிறர்க்குத் தீயவையே செய்பவன்' (210)

- வேரரிப்பாக புறங்கூறுதல் என்னும் உணர்வே பொதுத் தொண்டுக்கு முதற்பகையாக இருப்பதாலும், அந்தத் தீயவுணர்வு