பக்கம்:தமிழின எழுச்சி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் • 175

என்றால், நல்ல தொண்டுணர்வே உருவாகவில்லை என்றுதான் பொருள். இங்குள்ள தொண்டர்களிடையே நல்ல தலைவர் இல்லை என்றால், நல்ல தொண்டுணர்வே உருவாகவில்லை என்றுதான் பொருள். இங்குள்ள தொண்டர்களெல்லாரும் ஒன்றால் அடிமைகள் போல் செயல்படுகிறார்கள்; இன்றால், குருவுக்கு மீறிய மாணவர்கள் ஆகிவிடுகிறார்கள். தொண்டர்கள், அடிமைகள் அல்லர். தொண்டர்கள் தலைவர்க்குத் தோள்களைப் போன்றவர்கள்; தோழர்கள். தோள்கள் இயங்கினால்தான் கைகள் இயங்கும். கைகள் இயங்கினால்தான் கால்கள் இயங்கும். அப்படியே முதனிலைத் தொண்டர்களும், இரண்டாம் மூன்றாம் நிலைத் தொண்டர்களும் ஆவார்கள். தோள்கள் தலைக்குப் பக்கத்தில் இருந்தாலும், தலைபோல் இயங்கமுடியாது. எனவே, முதனிலைத் தொண்டர்கள் தலைமைக்குப் பக்கத்தில் இருந்தாலும், தலைமைபோல் கருதி, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைத் தொண்டர்களைத் தாழ்வாக எண்ணவோ, ஏவவோ செய்துவிடக்கூடாது. தலைமை என்பது தகுதிகளால் அமைவதே தவிர, பதவியால் வருவதன்று, பெரியாரைப்போல், காந்தியைப்போல், காமராசைப் போல் ஒரு நல்ல தலைமை, நாட்டுக்கோ இனத்துக்கோ கிடைப்பது அரிது. அவர்களுக்கென்று அவர்கள் எதையுமே வைத்துக் கொள்ளாததுடன், தங்களுடைமைகளையும் மக்களுக்காகக் கொடுத்த துறவிகளைப் போன்றவர்கள் அவர்கள்.

உடைமையை விரும்புபவர்கள் நல்ல தலைவர்களாக முடியாது. உடைமையை இழப்பதுதான் தலைமைக்கு முதல் தகுதி, அதேபோல், நல்ல தொண்டன் உடைமையை விரும்பக்கூடாது. உடைமை, அல்லது பொருள் தேவை என்பது வேறு; அதை விரும்புவது என்பது வேறு. தலைவன் கோடிக்கணக்கான உருபா வைத்திருக்கலாம்; அது தேவையும்கூட. ஆனால் அதில் ஓர் உருபாவைக்கூடத் தன் தனிநலத்துக்கென்று கருதிவிடக்கூடாது. இதனை நன்கு தெளிவுபடுத்தித் தொடக்கக் காலத் தென்மொழி அன்பர்களுக்கு உடைமையைப் பொறுத்த அளவில், ஓர் எடுத்துக்காட்டை நாம் கூறுவது வழக்கம்.

நம்மிடம் ஒரு காணி நிலமும் ஒருபடி விதை நெல்லும் கொடுக்கப் பெற்றுள்ளன. அல்லது வந்து வாய்க்கின்றன என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த ஒருபடி நெல்லை அந்த ஒரு காணி நிலத்தில் நாம் விதைத்துப் பாடுபட வேண்டும். அது ஒன்றுக்குப் பத்தாக விளைகிறது என்று வைத்துக்கொள்வோம். அல்லது நூறாக விளைகிறதாக வைத்துக்கொள்வோம். நம் அன்றாடத் தேவைக்கு அதில் ஒரு படி நெல்லையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். மீதி தொண்ணூற்றொன்பது படி நெல்லை நாம் மீண்டும் விதைத்துப்