பக்கம்:தமிழின எழுச்சி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 179


அது செயற்பாட்டுக்கு மிக அரிது எனப் பின்னர்த் தெரிந்து கொண்ட நிலையிலும், அதைச்சிறிது சிறிதாகவோ, பகுதியாகவோ; முழுவதுமாகவோ கைநெகிழ்க்காமை. (குறள். 1021)

2. எடுத்துக்கொண்ட கொள்கையைச் செயலுக்குக் கொண்டு வருவதையே தம் நீடிய வாழ்நாள் கடமையாகக் கொள்ளுதல், (குறள். 1022)

3. இடையில் நேரும் ஏற்றத் தாழ்வுகளையோ, விளைவுகளையோ முடிவையோ பற்றிக் கவலை கொள்ளாமல், தொடங்கிய உறுதியுடன் தொடர்ந்து கடமையாற்றுதல். (குறள். 1024)

4. பொது நிலைகளில் அறக்குற்றம் (நேர்மையிழத்தல், நம்பிக்கைக்கு மாறுபடல், வஞ்சகம் செய்தல், இரண்டகம் செய்தல், முதலியவை); பொருள் குற்றம் (பொதுப் பணத்தைக் கையாடல், தன்னலத்துக்கெனப் பொதுப் பணத்தைச் செலவிடல், பொறுப்பின்றிச் செலவு செய்தல், பணத்துக்கெனக் கொள்கையில் தாழல், விட்டுக் கொடுத்தல் முதலியவை); இன்பக்குற்றம் (காதல், காமம் விரும்பிக் கொள்கையை நெகிழ்த்தல், கைவிடல், ஒழுக்கங் கெடல், இன்ப நோக்கம் கொண்டு மனைவியையோ, உறவினர்களையோ பொதுச் செலவில் ஈடுபாடுகொள்ள வைத்தல் முதலியவை); அச்சக் குற்றம் (அச்சத்தின் பாற்பட்டுக் காட்டிக் கொடுத்தல், மறை வெளிப்படுத்தல், கொள்கையை மாற்றல் முதலியவை) ஆகிய குற்றங்கள் நேராமல், மக்கள் நலம் ஒன்றே கருதுதல். (குறள் : 1025; 501)

5. துணிவாகச் சரியென்று பட்டதைச் சொல்லவும், சரியன்று என்றும், பிழையென்றும் உணர்ந்தவற்றைக் கடியவும், தாம் சரியென்று ஏற்றுக் கொண்டதைச் செய்வும் ஆன துணிவுடைமை. (குறள் : 1026 ; 669)

6. பொறுப்புச் சுமைகளையும், கடமைத் துன்பங்களையும் தாங்கிக் கொள்ளும் பொறுமையுடைமை. (குறள் : 1027)

7. வெயில், மழை, பனி, குளிர், இரவு, பகல் முதலிய கால, நேரங்களைப் பாராமலும்; பழிகள், இழிவுகள், போட்டிகள், பொறாமைகள், தாழ்ச்சி வீழ்ச்சிகள், தோல்விகள், தொய்வுகள், ஏசல்கள், பூசல்கள் முதலியன வந்தவிடத்த மானம் கருதாமலும் கடமை செய்தல். (குறள் : 1028)

8. கடமைச் செயல்களுக் கிடையில் வரும் அகப்புறத் துன்பங்களையும், துயரங்களையும் பொருட்படுத்தாமை. (குறள் : 1029)