பக்கம்:தமிழின எழுச்சி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

180 • தமிழின எழுச்சி


9. தொடக்கத்தில் கூட்டாக நின்று கொள்கையைத் தம்முடன் இணைந்து ஏற்றவர்கள், தம்மினின்று விலகி வேறுபடினும், தாம் கொள்கைக் கொருவராகவே நிற்க நேரினும், மனஞ் சோர்வு றாமல் கொள்கையை இயன்றவரை மேலெடுத்துச் செல்லும் திறன் உடைமை. (குறள் : 814 ; 1027)

10. பொருளுக்கோ, பதவிக்கோ, புகழுக்கோ அவை வராவிடத்து ஆசையும் அங்காப்பும் அலைவும் கொள்ளாமலும், வந்தவிடத்து மயங்காமலும் அடிமையாகாமலும், அவற்றால் கொள்கை பழுது பட்டுப் போகாமல் காக்கவும், தம் கடமைக்கு அவை கருவிகளே ஆம் என்றெண்ணும் உயரிய நோக்கம் கொண்டிருத்தல்.

11. தம்மொடு இணைந்து இயங்கியவர்கள் மாறுபடினும், வேறுபடினும் அவர்களின் நிலைகளைப் பழித்தும் இழித்தும், கடமை யுணர்வுகளையும் காலத்தையும், அறிவு, உடல் முயற்சிகளையும் பாழடிக்காமல், தம் கொள்கையினின்று திசை திரும்பாத, திறம்பாத போக்கு.

12. எதனையும் எவரையும் நடுநிலையுடனும், அமைவுடனும், நம்பிக்கையுடனும், பொதுநோக்காகக் கருதவும், பொதுப்பயன் நோக்கிச் செய்யவும் ஆகிய நேர்மை உடைமை.

13. தந்நலம் கருதாமையுடன், தேவையானவிடத்துப் பொதுநலத்துக் காகத் தந்நலத்தைத் துறப்பவும் ஆன உணர்வு.

14. கொள்கைக்காக உயிர் விடவும் அஞ்சாத தனித்திறன். (குறள்: 877)

இப்பதினான்கு தகுதி நிலைகளும் நிறைவுற்றவராகக் காணப் பெறுபவர் மிகவும் அரியவராகவே இருப்பர். தொண்டுக்கென முன் வரும் ஒவ்வொருவரும், இவற்றுள் சில அல்லது பல நிலைகளில் குறை யுடையவராகவே இருப்பர். எனவே அவரவருக்குத் தக்கபடி அத் தொண்டு நிலை அமையும். “இவை முழுவதும் நிறைவுற்றவராக இருப்பவர்கள் கிடைக்கும்வரை தொண்டு என்னாவது? அத்தகையவர்கள் கிடைக்கின்ற வரை தொண்டுப்பணி தொடங்கப்பெறாமல் கிடக்க வேண்டுமோ? மேலும் இத் தொண்டுக்குரிய தகுதிப்பாடுகளை உடனே அறியவும் வாய்ப்பில்லையே! காலப் போக்கிலன்றோ இவற்றின் தன்மைகள் உறுதிப்படுத்தப் பெறும்” என்றெல்லாம் ஐய வினாக்கள் எழும். மேற்கண்ட தகுதி நிலைகளில் அவற்றுக்கு என்ன செய்வது? கிடைத்தவரையில் அல்லது சிலவேனும் பொருந்தியவர்களைக்