பக்கம்:தமிழின எழுச்சி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் . 185

விரட்டுவதற்கு அனைத்து முயற்சிகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து வருவது அவர்கள் பேச்சுகளிலிருந்து புலப்பட்டது.

கன்னட அரசு இந்த வகையில் தக்க பாதுகாப்புச் செய்து தர வேண்டுமென்றும் கோரிக்கை விடப்பட்டது. இச் செய்தி “இந்து” முதலிய செய்தித் தாள்களிலும் வந்துள்ளது.

இந் நிலையில் தமிழர்களுக்கு அங்குக் குடியிருக்க வீடும் வாழ்க்கை வசதிகளும் கிடைப்பது அரிதாக இருக்கின்றது. கன்னடியர்களுக்குக் கருநாடக மண்ணின் மீதும், மக்களின் மீதும் உள்ள பற்றின் காரணமாக அவர்களின் விழிப்பான, காப்பான அதே சமயத்தில் தமிழர்களுக்கு எதிர்ப்பான, வலிவான குரலை அவர்கள் எழுப்புவதையும், தாளிகைகள் அவற்றை வெளியிட்டு அவர்களுக்கு ஆதரவு தேடுவதையும் அறிகின்ற அதே நேரத்தில், தமிழ்நாட்டில் தமிழர்கள் விழிப்பின்றி ஏமாளிகளாய் வாழ்வதையும், தம்மினப்பற்றோ தம் நாட்டுப்பற்றோ அறவே இல்லாமல் இருப்பதையும் அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.


தென்மொழி சுவடி 21, திசம் 86 - சன 87