பக்கம்:தமிழின எழுச்சி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 187

வேண்டியதாயிற்று. இதுபற்றி நாம் எழுதிக் கொண்டு வரும் திருக்குறள் மெய்ப்பொருளுரையில் மிக விரிவாகவும் விளக்கமாவும் ஆழ்ந்த ஆராய்ச்சி அடிப்படையில் எடுத்துக் கூறியிருக்கிறோம். அவ் விரிவான நூலில் அக்கருத்துகளைக் கண்டு கொள்க.

இங்கு நாம் திருக்குறளில் இனநலமே எல்லாவற்றுக்கும் தக்க காப்பாக அமைகின்ற ஓர் உணர்வு என்னும் பொருளில் கூறப்பெற்றுள்ள மூன்று குறள் கருத்துகளின் அடிப்படையில் ஒரு கருத்தை நேரடியாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அது காலங் கருதி இடத்தால் சுட்டியதென்று அறிக.

திருக்குறளில்,

மனநலம் நன்குடைய ராயினும், சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து. (458)

மனநலத்தின் ஆகும் மறுமை; மற் றஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து. (459)

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம்
எல்லாப் புகழும் தரும். (457)

- எனவரும் இம் மூன்று திருக்குறள்களும் 'சிற்றினஞ்சேராமை' என்னும் அதிகாரத்தில் வருபவை. இக்குறள்களுக்கு, இவ்வதிகாரந்தழுவி இன்று வரை சொல்லப் பெற்று வரும் பொருள்கள் வேறு வேறானவை. அந்நிலை இவ்வதிகாரத்தின் பொருளையே தவறாகக் கொண்டதனால் வந்ததாகும். அந்த அதிகாரத்தைப் பற்றிய உண்மையான பொருளையும், அப்பொருள் கொள்ள வேண்டுவதற்கான அடிப்படை நயன்மை பற்றியும், அது தவிர வேறு பொருள்கள் பொருந்தாமற்போவன பற்றியும் இங்குக் கூறுவது தேவையன்று. நாம் இக் குறள்களில் கூறப்பெறும் கருத்துகளையே இப்பொழுது கவனிக்க வேண்டும்.

இக் குறள்களின் ஒட்டு மொத்தப் பொழிப்பாகக் கொள்ள வேண்டிய பொருள் இது. “மாந்த உயிர்களுக்கு எல்லாவகை அறிவு நலம், பொருள் நலம், வினைநலம், பண்பு நலம் முதலிய யாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது அவர்களின் மனத்தினது நலமே ஆகும். அதுவே மக்களுக்கு ஆக்கத்தையும் பயனையும், மறுமையையும் உண்டாக்கித் தரும் திறப்பாடு கொண்டதாகும். இது மக்களினத்தில் உயர்ந்தோராகக் கருதப் பெறுபவர்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும். ஆனால் அதைவிட, அவர்களுக்கும், அவர்களை உயர்ந்தோராக, நல்ல பண்பு நலம் பெற்றவர்களாகக் கருதுவதற்கு அடிப்படையாக உள்ள, முற்கூறப்