பக்கம்:தமிழின எழுச்சி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

188 • தமிழின எழுச்சி

பெற்ற பண்பு நலன்களுக்கும் முகாமையாக உள்ளது இனநலமே ஆகும். எனவே, ஓர் இனம் தன் பண்பாடுகளையும், பிற நாகரிகக் கூறுகளையும், மற்றும் பிற ஆக்கங்களையும் காத்துக் கொள்ள விரும்பினால், அதற்கு முற்றிலும் காப்பாக உள்ள இன நலத்தை அது காத்துக் கொள்ளாமல் அதில் நெகிழ்ச்சியோ, தளர்ச்சியோ, புறக்கணிப்போ காட்டுமானால், அ’து ஏற்கனவே காத்துக் கொண்டுள்ளனவும், இனிமேலும் காத்துக் கொள்ள விரும்புகின்றனவுமாகிய அப் பண்பு நலன்களுக்குக் காப் பில்லாமல் போகும்” என்பதே ஆகும். (அருள் கனிந்து இப் பொழிவுக் கருத்தை மீண்டும் மீண்டும் படித்து நன்கு விளங்கிக் கொள்ளவும்.)

இக்கருத்து முதன் முதலாகவும், எச்சரிக்கையாகவும், இன நலக் கவலையோடும் திருவள்ளுவரால்தான் முதன்முதலாகக் கூறப் பெற்றது என்பதை நாம் உறுதியாகக் கொண்டால், அவர்தான் நமக்கு மூல முதல் இனநலத் தலைவரும், இனநலக் காப்பாளரும் ஆகிறார் என்பதையும் நாம் ஒப்புக் கொண்டாகல் வேண்டும். ஒப்புக் கொள்ளவே, இக் கருத்து, பிற ஆத்திரேலிய இனத்துக்கோ , சீன இனத்துக்கோ, ஐரோப்பிய இனத்துக்கோ சொல்லப் பெறாமல், நம் தமிழினம் ஒன்றுக்கே மிகவும் முகாமையாகக் கூறப் பெற்றதாகக் கருத்தில் கொள்ளல் வேண்டும். அத்துடன் திருவள்ளுவர் அதை ஏன் அவ்வளவு வலியுறுத்திக் கூறுகிறார் என்பதையும் நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

அவ்வாறு பார்த்தோமானால், இக்கால் வேற்று இனத்தவரால், இந்தியாவிலும் தமிழீழத்திலும் நேர்கின்ற இன நலத்தின் அழிவுகளையும் அவ்வழிவுகளினால் ஏற்படவிருக்கும் விளைவுகளையும் நாம் ஒருவாறு விளங்கிக் கொள்ள முடியும். அப்படி அதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்வோமானால், நாம் இப்பொழுதைய நிலையில் நம் இனத்திற்கே மிகச் சிறப்பாய் அமைந்துள்ளனவாகக் கருதும், பண்பியல் கூறுகளான, இலக்கியம், இலக்கணம், கலைகள், பண்பாடுகள், நாகரிகங்கள் முதலியவற்றைப் பற்றியும், மற்றும் அரசியல், பொருளியல், அறவியல், அறிவியல், வாழ்வியல் கூறுகளைப் பற்றியும் நாம் கவலைப்படாமல், அவற்றையும் நம்மையும் படிப்படியாக அழிக்கவரும் புறநிலைத் தாக்கங்களுக்கு அடிப்படையாக உள்ள இனநலக் காப்பற்ற தன்மையை நன்கு உணர முடியும். அவ்வுணர்வினால் நாம் என்ன முடிவுக்கு வரவேண்டியவர்களாக ஆவோம் எனில், இனத்திற்குப் பின்னர்தாம் பிற அனைத்தும் என்பதையும் இனம் இருந்தால்தான் நமக்குள்ள பிற அனைத்தும் இருக்கும் என்பதையும், அவ்வாறல்லாமல் இனநலத்தை நாம் சிதறவிடுவோமாயின், நாம் நம்