பக்கம்:தமிழின எழுச்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
திருவையாறு அரசர் கல்லூரித்
தலைவரின் திருவிளையாடல்கள்!


புலி, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இறுதியில் மாந்தனையே கடித்தது போலத் திருவையாறு அரசர் கல்லூரித் தலைவர் தொடக்கத்தில் சமற்கிருத வெறியராக விருந்து தமிழ்க்குக் கேடுகள் பல செய்து வந்ததுமன்றி, இக்கால் தமிழ்ப் படிக்கும் மாணவர்களை ஏதோ ஒருசில காரணங்களைக் காட்டி வெளியேற்றவும் தொடங்கியுள்ளார் என்பதறிந்து மிகவும் மனம் வருந்தினோம். அதன் முதற்படியாகக் கடந்த மாத முடிவில் தனித்தமிழ்ப் பற்றும் தமிழ் வளர்க்கும் நோக்கமும் கொண்ட பதினான்கு தமிழ் மாணவர்களைக் கல்லூரியினின்று விலக்கியே விட்டதாக அறிகின்றோம். எந்தத் தமிழர் ஆட்சிக் காவலராக இருப்பினும், ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் தங்கள் திருவிளையாடல் களைச் செய்து கொண்டுதாம் இருப்பர் என்பதை, அரசர் கல்லூரியின் பார்ப்பனத் தலைவர் திரு.எச்.இராசகோபாலன் அவர்கள் மெய்ப்பித்துள்ளார். இந்நிகழ்ச்சி ஒன்றே இக்கால் தமிழ்க்கும் தமிழர்க்கும் போதிய காப்பில்லை என்பதற்கும், தமிழ்ப்பற்றுக் கொண்டவர் என்ற காரணங்காட்டி, அரசியல், பொருளியல், குமுகவியல், கல்வித்துறை முதலிய எவ்வகையானும் பெறவிருக்கும் முன்னேற்றத்தை எளிதாகத் தடை செய்துவிட முடியும் என்பதற்கும் போதிய சான்றாகும்.

1957-லும் இது போன்றதொரு நிகழ்ச்சி நடந்துள்ளது. அக்காலும் இதே போன்று தமிழ் மாணவர்கள் பலரை அன்றிருந்த கல்லூரித் தலைவர் வெளியேற்றினார். பலரைத் தேர்வுகளில் தேர்வு பெறாமல்