பக்கம்:தமிழின எழுச்சி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 201

கட்டுப்பாட்டை மீறியும் தலைவரின் இசைவு பெறாமலும் தமிழீழம் சென்று வந்தது தவறு' என்ற கண்டிப்புடன் அந்த அறச்சிக்கலான (தர்ம சங்கடமான) நிகழ்ச்சியைப் பெருந்தன்மையுடன் விட்டிருக்கலாம், ஆனால், கலைஞர் தம் உணர்வெல்லையையும் தாண்டி, “வை.கோ. செய்தியாளரைச் சந்தித்துப் பேசியது தவறு” என்றும், “இந்த இலங்கைச் செலவு (பயணம்) தேவையற்றது, பயனற்றது” என்றும், “இவ்வாறு இலங்கை சென்று அவர் புதிய செய்தி எதுவும் கொண்டு வரவில்லை என்றும்” அவர் கூறிய செய்திகள் முன்பே தெரிந்தவைதாம் என்றும், “எனவே இது பொறுப்பற்றசெயல்” என்றும், “வெறும்விளம்பரத்துக்காகச் செய்தது" என்றும் வை.கோ. மண்டையிலும் தமிழீழ ஆர்வலர்கள், ஆதரவாளர்கள் நெஞ்சிலும் அடித்தபடி சொல்லி, அவர் செயலுக்கு ஓர் ஊக்கக் குறைவையும், ஒரு மெலிவையும், தலைக் குனிவையும் ஏற்படுத்தியிருக்கத் தேவையில்லை . இதனால் நடுவணரசு வல்லதிகாரக் காரர்களிடமிருந்து தம் கண்டிப்புக்கு ஒரு மெச்சுதலையும் கலைஞர் எதிர்பார்த்திருப்பார் என்றாலும் அதுவும் பயனளித்து விட்டது என்று சொல்வதற்கும் இல்லை . இஃது ஒரு வகை அரசியல் தந்திரமான நடைமுறை என்று நாம் பெருமை கொள்வதற்கும் இல்லை என்பதைக் கலைஞர் உணர்ந்து கொள்ள வேண்டும்.'

தமிழீழத்தைப் பொறுத்த வகையில் கலைஞர் எந்தக் கருத்தைக் கூறுவதானாலும், நடுவணரசுக்காக கூறுவதும், குறுகுவதும், குழைவதும் இனி மேலும் தேவையில்லை. வருவது வரட்டும் என்று தலை தூக்கியும், நெஞ்சை நிமிர்த்தியும் உரக்கச் சொல்லுதல் வேண்டும். சுற்றி வளைத்துப் பேச வேண்டிய தேவையும் அவர்க்கு வேண்டியதில்லை. தமிழின முன்னேற்றம் தொடர்பாகவோ, தமிழீழம், தமிழ்நாடு தொடர்பாகவோ, எந்தக் கருத்தையும், எந்தக் கொள்கையையும் தமக் குற்ற அரசியல் நலம் கருதி, எதற்காகவும், எவரிடத்தும், எந்தச் சூழ்நிலை யிலும், தம்மை மறைத்துக்கொண்டோ, தாழ்த்திக் கொண்டோ கூற வேண்டியதில்லை. துணிவாகவும், வெளிப்படையாகவும் கூற வேண்டிய காலம் வந்து விட்டது என்பதைக் கலைஞர் எண்ணிக் கொள்ள வேண்டும்.

அடுத்து, முன்னர்க் கூறிய இவ்விரு விளைவுகளையும் நாம் உருவாக்க வேண்டுமானால், இன்றுள்ள தமிழர்களுக்குப் போதுமான இனவுணர்வை ஊட்டி அவர்களை நமக்குத் துணையாக்கிக் கொள்ள வேண்டும். கல்வித்துறை, வாழ்வியல், செய்தித்தாள் முதலிய முகாமையான அனைத்து நிலைகளிலும் தமிழினவுணர்வை நம் மக்களுக்கு நாம் ஊட்டியாகல் வேண்டும்.