பக்கம்:தமிழின எழுச்சி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20 - தமிழின எழுச்சி

செய்தனர். அப்பொழுதும் அம் மாணவர்கள் சார்பில் எவ்வகையான நடவடிக்கையும் மேற்கொள்ளப் பெறவில்லை. இன்றும் “என்னுடைய காலத்தில் கல்லூரியை இழுத்து மூடிவிடுவேன்” என்று திரு. இராசகோபாலன் அடிக்கடிக் கூறிவருவதையும், அவர் நடந்து கொள்ளும் அடாவடிச் செயல்களையும் எண்ணிப் பார்த்தால், ஒரு வேளை கல்லூரியை மூடிவிடத்தான் அவர் முயற்சி செய்கின்றாரோ என்று கருத வேண்டியுள்ளது. இந்நிலைகள் இத்தகைய அளவிற்குக் கட்டு மீறிப்போயும், இவற்றைப்பற்றிப் பல்கலைக் கழகமோ, கல்வித் துறையோ, தனிப்பட அமைச்சர்களோ எவ்வகையான நடவடிக்கை களையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இவற்றிற்கெல்லாம் அக்கல்லூரித் தலைவர்க்குப் பலவகையிலும் பெருந்துணையாக விருந்துவரும் மாவட்ட ஆட்சித் தலைவரும் ஒரு பார்ப்பனர் என்பதே காரணமாக இருக்கலாம் என உய்த்துணரப்படுகின்றது.

கல்லூரித் தலைவர் மாணவர்களுக் கேற்றவரல்லர் என்பதற்கு அவர் மேற்கொண்ட ஒரு சில நடைமுறைகளே சான்றுகாளகும். அவற்றுள்,

  1. அ. இந்திய நாட்டின் தலைமையமைச்சர் நேரு இறந்தமைக்காக இந்நாட்டிலும் பிற நாடுகளிலும் உள்ள மக்களும் மக்கள் தலைவர்களும் ஆங்காங்கே கூட்டங்கள் நடத்தி இரங்கல் தெரிவித்ததைப் போல், இக் கல்லூரியில் பயிலும் நாட்டுப் பற்றுடைய தமிழ் மாணவர்கள் சிலர் இரங்கற் கூட்டம் நடத்த இசைவு கேட்டும், அதற்கிசைவு தராமற்போனதுடன், மாணவர்கள் எவ்வகையானும் அக் கூட்டத்தை நடத்தாதவாறு மிகக் கண்டிப்பாக இருந்ததும்,
  2. ஆ. சமற்கிருதத்திற்கென்றே தொடங்கப் பெற்ற இக்கல்லூரியைத் தமிழ்க் கல்லூரியாகவும் மாற்றிய திரு.ஏ.டி.பன்னீர்ச்செல்வம் போன்ற தலைவர்களின் நினைவு விழாக்களையும், திருவள்ளுவர் மன்றச் சார்பாக நடந்துவந்த தமிழ் இலக்கியக் கூட்டங்களையும் நடைபெறாமல் தடுத்து நிறுத்தியதும்,
  3. இ. பார்ப்பன இனத்தவர் என்ற ஒரே காரணத்தால் யானைக்கால் நோய் கொண்டவரும், முன்பு ஒருகால் மாணவர் ஒருவரின் மண்டையில் ஒரு கட்டையால் அடித்துப் படுகாயத்தை உண்டாக்கியதற்குத் தண்டனையாகக் கல்லூரியினின்று மேலாளரால் விலக்கப்பட்டவருமான ஒருவரையே மீண்டும் உணவு விடுதித் தலைவராக இவர் வைத்துக்கொண்டதுமன்றி அவர் கூற்றுப்படியே தமிழ் மாணவர்களைக் கொடுமைப்படுத்தி வருவதும்,