பக்கம்:தமிழின எழுச்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
திருக்குறளும் தமிழினமும்

திருக்குறளைப் பற்றித் தமிழன் தெரிந்து கொள்ள விரும்பாத காலம் ஒன்றிருந்தது. திருக்குறளைப் படித்துத் தெளியாத தமிழர் இருந்தனர். திருக்குறள் என்றால் திருக்கோயிலூரா என்று கேட்கும் பேதை மாந்தர் இன்றும் இல்லாமல் இல்லை. 'தீக்குறளை சென்றோ தோம்”- என்ற பாவையடிக்குத் “திருக்குறளை ஓதமாட்டோம்”- என்று பொருள் கூறினாரும் இக்காலத்தவர்தாம். திருக்குறளினும் சிறந்து விளங்குவது பரிமேலழகர் உரையே என்று கரவுரை கூறுவாரும் தமிழினத்தாருடன் அறக்கலந்தே உள்ளனர். வடமொழி நூல்களின் பிழிவே திருக்குறள் என்று பெருமை பேசும் ஆரியப் பித்தர்களையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம். திருக்குறளிலும் அடிமைக் கருத்துகள் உளவாகையால் அதனையும் விலக்கியே ஆகவேண்டும் என்று பேசப்பெறும் கருத்தும் சீர்திருத்தம் என்று மதிக்கப் பெறுகின்றது. ஓரினத்துத் தோன்றிய ஓர் உயர்ந்த அறநூலைப்பற்றி அவ்வினத்து மாந்தரே இவ்வாறு பெருமைக் குறைவாகப் பேசுகின்ற தீயூழ் இத்தமிழினத்தல்லாது பிறிதோர் இனத்துள் காண்பது மிகமிக அரிது.

திருக்குறளின் அறத்துப்பாலையும் மநுவின் 'தர்ம சாத்திரத்தையும்' ஒருமுறை ஒப்பிட்டுப் பார்த்தாலே, திருக்குறளின் மாட்சியும் மதுவின் சூழ்ச்சியும் தெற்றெனப் புலப்படும். 'வருண' அடிப்படையை வல்லெனப் புகுத்தும் மநுவின் 'தர்ம’ மெங்கே? பிறப்பின் வேறுபாட்டைக் கடிந்துவிலக்கும் திருக்குறள் அறம் எங்கே? ஆரியப் பார்ப்பனரின் ஏற்றத்திற்கென்றே உருவாக்கப்பெற்ற மநு எங்கே? தமிழினத்துப் பிறந்தும் தம்மினத்தார்க்கென்று தனித்த ஓர் சொல்தானும் கூறாமல்,