பக்கம்:தமிழின எழுச்சி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36 • தமிழின எழுச்சி

பொருள்களே. பொன், வெள்ளி, தாமிரம், துத்தநாகம், இரும்பு முதலிய கனியப் பொருள்களும், மாணிக்கம், வயிரம், பவழம், முத்து முதலிய மணியப் பொருள்களும், பால், கத்தூரி, புனுகு, கோரோசனை, கொம்பு, குளம்பு, மலக்கழிவு, நீர்க்கழிவு, இறைச்சி, ஓடு முதலிய உயிர்ப் பொருள்களும் தமிழ் மருத்துவத்தில் அரிதாகக் கையாளப்பெறும் மருத்துப் பொருள்களே! இவையன்றிக் கண்கூடானவையும் கிடைத்தற்கெளிதானவையுமான,

இலுப்பை, எட்டி, கருங்காலி, கருவேலன், வெள்வேலன், வில்வம், வெண்காலி, சண்பகம், மருதோன்றி, புங்கன், பாதிரி, நெல்லி முதலிய மரங்கள்; குவட்டி, களா, செந்தொட்டி, சித்தாமுட்டி, பேராமுட்டி முதலிய செடிகள்; முசுமுசுக்கை, காக்கட்டான், காஞ்சொறி, பேய்ச்சுரை, குறிஞ்சா, அறுகு, மல்லிகை, பச்சைத்திப்பிலி முதலிய கொடிகள் இவற்றின் வேர் வகைகளும்,

இஞ்சி, மஞ்சள், கருணை, முள்ளங்கி, சருக்கரை, நிலச்சருக்கரை, அமுக்கிராம், சேம்பு, சீந்தில், கோவை, கூகை, புளிநரளை, தாமரை, நெய்தல், கொட்டி, நிலப்பூசனி, வள்ளி முதலிய செடிகள், அறுக்கோரை, மருளை, கிட்டி, வெங்காயம் முதலிய புற்கள் ஆகியவற்றின் கிழங்கு வகைகளும்,

கருவேலன், நொச்சி, புளியன், கருங்காலி, அத்தி, கோங்கு, கொஞ்சி, நாவல், முருங்கை, அக்காரம் முதலிய மரங்களினின்று கிடைக்கும் பட்டை வகைகளும்,

முருங்கை, மா, மலைவேம்பு, கருவேலன், வாகை, இலவம், விளா, அடப்பம் முதலியவற்றின் பிசின் வகைகளும்,

மரு, வேலன், வேம்பு முதலியவற்றின் கொழுந்து வகைகளும், வேம்பு, அகத்தி, ஈந்து, மூங்கில், முருங்கை , புளியன் முதலிய மரங்கள்; குப்பைமேனி, எருக்கு, தக்காளி, தும்பை, தூதுவளை, சுரை, புகையிலை, ஆடாதொடை, ஆமணக்கு, செம்பை, நொச்சி, கின்னி, விராலி. பாலை, உத்தாமணி, கழற்சி, குமட்டி முசுமுசுக்கை முதலிய செடி கொடிகள் ஆகியவற்றின் இலை வகைகளும்,

தாமரை, அல்லி, முல்லை, மல்லிகை, நெய்தல், கழுநீர், வெட்சி முதலிய கொடிகள்; அலரி, நந்தியாவட்டை, களா, செம்பருத்தி, அவாரை, செம்பை, செவந்தி, தும்பை முதலிய செடிகள்; வாழை, முருங்கை, மாதுளை, தாழை, கொன்றை, சண்பகம், பாதிரி, குங்குமம் முதலிய மரங்கள் ஆகியவற்றின் பூ வகைகளும்,