பக்கம்:தமிழின எழுச்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 37


வாழை, பலா, மாதுளை, மா, முருங்கை, நரந்தை, கத்தரி, அவரை முதலியவற்றின் பிஞ்சு வகைகளும்,

அத்தி, இத்தி, நெல்லி, முருங்கை, பலா, வாழை, புளி, கடுக்காய், எலுமிச்சை, நாரத்தை, பனை முதலிய மரங்கள்; ஊமத்தை, வெண்டை , சுண்டை , களா, தக்காளி, கத்தரி முதலிய செடிகள்; வெள்ளரி, சுரை, பரங்கி, பூசுனை, புடலை, அவரை, பீர்க்கு, பாகல், வழுதுணை, குமுட்டி முதலிய கொடிகளாகியவற்றின் காய் வகைகளும்,

வாழை, மா, பலா, நாவல், கொய்யா, எலுமிச்சை, நரத்தம், பேரீச்சம், தாழம், களா, காரை, கொடிமுந்திரி, தூதுளை முதலியவற்றின் கனி வகைகளும், மா, பலா, புளி, எட்டி, புங்கன், கடப்பன், ஆளி, உத்திராக்கம், நெருஞ்சில், தேற்றான், குன்றி, சாமை, தினை, திப்பிலி, கேழ்வரகு, கம்பு, பயறுவகைகள் முதலியவற்றின் விதை வகைகளும்,

முந்திரி, வாதுமை, சாரா, மிசிரி, துத்தி, தகரை, ஊமத்தை முதலியவற்றின் பருப்பு வகைகளும்; இவற்றின் கலவைகளும், பிழிவுகளும், சாந்துகளும், தூள்களுமே சித்த மருத்துவப் பொருள்கள். இவற் றுள் பெரும்பாலனவை உணவுப் பொருள்களே என்பதையும் இவை எத்துணை வெளிப்படையான மருத்துவப் பொருள்கள் என்பதையும் அறிந்துகொள்க.

இனி, இன்றுள்ள எத்துறையிலும் தூய தமிழ்ச் சொற்கள் கையாளப் பெறாதது போலவே, சித்த மருத்துவத்திலும் வடமொழிச் சொற்களே மிகுதியும் கையாளப் பெறுகின்றன. கருக்குக் குழம்பை 'கஷாயம்' என்றும் மெழுகை லேகியம்' என்றும், நீற்றைப் 'பஸ்பம்' என்றும், கனியத்தை 'உலோகம்' என்றும், செந்தூளைச் 'ஸிந்தூர' மென்றும், குளிகையைக் 'குளிகா' என்றுமே இற்றைத் தமிழ் மருத்துவர்கள் கூறி வருகின்றனர். எனவேதான் தமிழ் மருத்துவம் ஆரிய (ஆயுர்வேத) மருத்துவத்தினின்று கிளைத்தது போல் அறிவாராய்ச்சியற்ற ஆரிய அடிமைகளும் ஆரியப் பார்ப்பனர்களும் இட்டுக்கட்டி பேசி, அச் சொற்களையும் எடுத்துக்காட்டிக் கதை பரப்புகின்றனர். ஆரியப் பார்ப்பனர் செய்த அளவற்ற கேடுகளில் இம் மருத்துவத்துறைக் கேடும் ஒன்று. எண்ணற்ற தூய தமிழ் மருத்துவ நூல்களை ஆரியத்தில் பெயர்த்தெழுதிக் கொண்டதுமன்றி, அவற்றினின்றுதான் தமிழ் மருத்துவமே கிளைத்தது என்று பொய்யுரைகளையும் போலிக் கதைகளையும் வீணே பரப்பி விட்டனர். பதிணெண் சித்தர் எழுதியனவாகக் கிடைக்கும்