பக்கம்:தமிழின எழுச்சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

40 • தமிழின எழுச்சி

மருத்துவத்தைத் தாழ்த்தி யெழுதிய உரைகளும் காணப்பெற்றன.

ஆங்கில மருத்துவ மாணவத் தமிழர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். திருவள்ளுவர் தமிழ் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே உரியவரல்லர். ஆங்கில மருத்துவ மாணவ அன்பர்களுக்கும் வேண்டியவரே. அவர் எப்படி எல்லார்க்கும் பொதுவானவரோ அப்படியே அவர் கழுத்திலுள்ள துடிப்பறிமானியும் எல்லார்க்கும் பொதுவே. மருத்துவம் பயிலாத ஒரு தனிப்பட்ட மாந்தனும் கூட அதனை வைத்திருக்கத் தடையில்லை. மருத்துவர்களுக்கே தேவையான வெப்பமானி (Thermameter)யைப் பெரும்பாலார் தம் வீடுகளில் வாங்கி வைத்திருக்க வில்லையா? இவையெல்லாம் ஒரு கலைக்கான கருவிகளே. அன்று தமிழன் பனையோலைகளில் எழுதி வந்தான் என்பதற்காகத் தமிழனுக்காகப் பேசும் பேச்சுக்களெல்லாம் பனையோலைகளில்தாம் எழுதப்பட வேண்டுமா? அன்று தமிழன் நடந்தோ, மாட்டு வண்டியிலோ போனான் என்பதற்காக இன்று மேனாட்டாரின் ஒவ்வாப் பண்பாடு வேண்டா என்போன் உந்து வண்டியில் ஏறக்கூடாதா? அவ்வாறானால் ஆங்கில மருத்துவம் பயில்வோர் தமிழ்நிலத்தில் நடப்பது மட்டும் எப்படிச் சரியாகும்? தமிழ்நாட்டின் இட்டலி, தோசை, ஆப்பம், இடியாப்பம், வடை இவற்றை உண்ணுவது மட்டும் எப்படிச் சரியாகும்? கருவியில்லாத காலங்களில் சில பல முறைகளில் இயங்க வேண்டுவதாயிற்று. கருவியே கலையாகாது. பழங்கால ஓவியங்கள் திரைச்சீலைகளிலும் தோல்களிலும் பலவாறான சாயப்பொருள்களைக்கொண்டு குழைத்த வண்ணங்களால் வரையப்பட்டன, என்பதால் ஓவியம் எல்லாம் அப்படித்தான் வரையப் படவேண்டும் என்று கூறுதல் கூடாது. புதிய கருவிகளைக்கொண்டு பழைய கலைகளைப் பயில்வதால் கலை சிறப்படையுமே தவிர கருவி இழிவடையாது. திருக்குறள் இக்கால அச்சுப் பொறிகளில் அச்சாவதால் திருக்குறள் பெருமையுறுவதுடன் நன்கு பரவ முடிகின்றதில்லையா? இந்த எளிய விளக்கத்தைப் புரிந்து கொண்டிருந்தால் ஆங்கில மருத்துவம் பயிலும் மாணவர்கள் தமிழ் மருத்துவம் பயிலும் மாணவர்களை அவர்கள் துடிப்பறிமானியைக் கையாள்வதற்கும் குருதியோட்ட மானியைப் பயன்படுத்துவதற்கும், சுரமானியைப் பயன்படுத்துவதற்கும் யாதொரு மறுப்பும் கூறியிருக்க மாட்டார்கள்; பூசலும் விளைந்திராது.

இனியேனும் மாணவர்க்கிடையில் நடைபெறுகின்ற இப்போட்டி பூசல்களில் தக்க அமைவு ஏற்படும் என்று எண்ணுகின்றோம் மேலும் தமிழக அமைச்சர்கள் தமிழ் மருத்துவக்கல்லூரி மாணவர்களுடைய