பக்கம்:தமிழின எழுச்சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

50 • தமிழின எழுச்சி

செய்திருக்கிறார் - காமத்துப்பால் வாத்சாயனார் எழுதிய காமசூத்திரம் இவற்றைப் பார்த்துச் செய்தார் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

அறத்துப்பால் எப்படி மநுதரும சாத்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட சரக்கு - கருத்து அன்று; திருவள்ளுவருடைய மூளையிலிருந்து நேராக இறக்கப்பட்ட கருத்து என்று காட்டப் பதினான்கு சான்றுகள் இருக்கின்றன. ஒன்று, இரண்டல்ல - நன்றாகத் தெளிவான சான்றுகள் பதினான்கு. இந்தச் சான்றுகளை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக; அங்கங்கே சொல்ல வேண்டுமென்பதற்காகச் சொல்லுகின்றேன். மாநாட்டிலே சரியானபடி நான் விளக்கவிருந்த நேரத்தை எடுத்துக்கொள்ள வில்லை; நேரம் எப்படி எப்படியோ போய்விட்டது; இருந்தாலும் இதைத் தெரிந்து கொண்டு போங்கள். திருக்குறளிலே புலால் மறுத்தல் ஓர் அதிகாரம். புலால் உண்ணாமையை மிக வன்மையாகச் சொல்லுகிறார்! அழுத்திச் சொல்லுகிறார். இதை அவர் அவ்வளவு வலியுறுத்திச் சொல்லுகிறார்; ஏன் தெரியுமா? மநு நூலிலே இது அழுத்தி வரவேற்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் அவர் மறுத்துச் சொல்லியிருக்கிறார். புலால் உண்ண வேண்டுமென்றே சொல்லியிருக்கின்றது, யாரை? பிராமணனை. புலால் உண்ணவில்லையனால் இருபத்தொருமுறை மாடாகப் பிறப்பான் என்று சொல்லியிருக்கிறது. என்ன புலாலைத் தெரியுமா? அந்த மாட்டு இறைச்சியை தெளிவாக இருக்கிறது. எப்பொழுது தெரியுமா? அதுவும் தன்னுடைய முன்னோர்களில் யாராவது இறந்தபொழுது அவர்களுக்காகப் படைக்கப்படுகிற அந்த உணவிலே மாட்டை அடித்து அறுத்து அந்த இறைச்சியை வைத்துப் படைத்து அந்த படையலோடு அந்த மாட்டிறைச்சியை அவன் உண்ணவில்லையானால், அடுத்தப் பிறவிகளில் அவன் பிராமணன் மாடாய்ப் பிறப்பான் என்று இருக்கிறது. இதுபோன்ற இடங்கள் மிகுதி, மநு நூலிலே. இப்படிப்பட்ட மநுநூலைப் பார்த்தா திருவள்ளுவர் திருக்குறளை எழுதியிருப்பார். அதை மறுத்து எழுதியிருக்கிறார் என்றுகூடச் சொல்லலாம். இன்னுஞ் சொன்னால் திருவள்ளுவர் காலத்தைவிட மநுநூலார் காலம் மிகவும் பிந்தியது. அதை முதலிலே நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். திருவள்ளுவர்காலம் மிகவும் பிந்தியது என்ற ஒருகருத்து வையாபுரி காலத்திலே இருந்தது. இப்போது அஃது அடியோடு வெட்டி வீழ்த்தப்பெற்ற கருத்தாகப் போய்விட்டது. இனி ஓர் எடுத்துக்காட்டுக்காகக்கூட நாம் அதைப் பயில வேண்டா என்று உங்களை வேண்டிக் கொள்கின்றேன். இரண்டு, கொல்லாமை என்கின்ற ஒரு நிலை, அந்தக் கொல்லாமை என்கின்ற நிலையை எதிர்த்துப்பேசப்பட்டிருக்கிறது மநு நூலிலே. யாகம் செய்பவர் களில்லையா? அந்த யாகத்திலே, கொல்கின்ற அந்தப் 'பாவம்'