பக்கம்:தமிழின எழுச்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 61

இருக்கின்றதே, அது 'பாவம்' ஆகாது என்று இருக்கின்றது. தாராளமாக வெட்டி வீழ்த்தலாம் என்று இருக்கிறது. மூன்றாவது, (திருக்குறள் என்று நினைத்தவுடனே நமக்கு நினைவுக்கு வருகின்ற கருத்துகள் இவை; மது என்று நினைத்தவுடனே உங்களுக்கு நினைவுக்கு வரவேண்டிய கருத்துகள் இவை என்பதற்காக இவற்றைச் சொல்லுகிறேன்) கள்ளுண்ணல் கள்ளுண்ணலைப் பற்றித் திருக்குறளிலே கண்டிக்கப்பட்டிருக்கிறது. கள்ளுண்ணல் கூடவே கூடாது; அவன் (கள்ளுண்டவன்) மகனாகவே இருக்கமாட்டான் என்று சொல்லியிருக்கிறது; அதிலே (மநுநூலிலே) கள்ளுண்ணல் பாராட்டப்பட்டிருக்கிறது. கள்ளுண்பதற்காகவே, அந்தக் கள்ளால் மயக்கம் தருகின்ற சுரா என்ற குடியை (பானத்தை)ப் பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று இருக்கிறது. அந்தக் கள்ளுண்டுதான் அவர்கள் அந்த யாகத்தைத் தொடங்க வேண்டும் என்று எல்லாம் குறிக்கப்பட்டிருக்கிறது. நான்காவது வருணப் பாகுபாடு. அதாவது நிறவேற்றுமை. இந்த நிறவேற்றுமை தெளிவாக அதிலே குறிக்கப்பட்டிருக்கிறது. பிராமணன் இப்படி, வைசியன் இப்படி, சத்திரியன் இப்படி, சூத்திரன் இப்படி என்று எல்லாம் பாகுபாடு கற்பிக் கப்பட்டிருக்கிறது. இதை அடியோடு மறுத்துரைக்கிறார் திருவள்ளுவர். எத்தனையோ இடங்களிலே - அதையெல்லாம் சொல்லிக்கொண்டே போனால் நிறைய நேரம் ஆகும். ஐந்தாவது, ஐயா பேராசிரியர் அவர்கள், இலக்குவனார் அவர்கள் சொன்ன கருத்து. சில நேரங்களிலே நாமே வலிந்துகூடப் பிறர் பொருளை எடுத்துக்கொள்ளலாம் என்று எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. அறத்தைப் பற்றிச் சொல்லும் போது, வள்ளுவர் அதனை அடியோடு மறுத்து, “கொடுக்கிறது மிகவும் உயர்ந்தது; அன்போடு கொடுப்பதானாலும் அதை வாங்கிக் கொள்கிறது மிகவும் இழிந்தது" என்று சொல்லியிருக்கிறார். இதுதான் தமிழ்க் கொள்கை. அதை விடாமல், எங்கே இந்த ஆரியச் சார்பான பழக்க வழக்கங்களிலே தமிழர் மறந்து விடுவார்களோ என்று அதை விழிப்பாயிருந்து மறுத்து இருக்கிறார். இதற்கெல்லாம் எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. நேரமின்மையினாலே கருத்துகளை மட்டும் சொல்லிக்கொண்டு போகின்றேன்.

ஆறாவது கல்வி. கல்வி யாருக்கும் உரிமையில்லை. அது பிராமணர்களுக்கு மட்டும்தான் உரிமை, பிராமணர்கள் மட்டும்தான் கல்வி கற்கவேண்டும். சூத்திரர்களுக்கோ, வைசியர்களுக்கோ, சத்திரியர்களுக்கோ யாருக்கும் இடம் இல்லை. சத்திரியர்கள் போர்ப்பயிற்சியில் தான் இருக்க வேண்டும்; வைசியர்கள் வாணிகந்தான் செய்ய வேண்டும்; பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும், சூத்திரர்கள் மூன்று இனத்தாருக்கும், இன்னுஞ் சொன்னால் முதலினத்தாருக்குச் செய்தவர்கள் போக