பக்கம்:தமிழின எழுச்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 53

வள்ளுவர் வரையறுத்துப் பேசுகிறார். இந்தத் தூது முறையும் அந்த மநு நூலிலே சொல்லப்படவில்லை . பத்தாவது வரைவின் மகளிர், மது, சூது இவை அரசர்க்கு விலக்க வேண்டியன என்பது குறள். அரசர்க்குச் சில இன்ப நிலைகளுக்குச் சில பொருள்கள், மயக்கப் பொருள்களெல்லாம் அங்கே வைக்கப்பட்டிருக்கும். இவற்றை விலக்கிவிட வேண்டும் அரசனானவன். ஏனென்றால் அந்த மயக்கப் பொருள்களைக் கொடுத்து அரசனுடைய தன்மைகளை மறக்கச் செய்வான் என்கின்ற நிலை அங்கிருக்கும். ஆதலாலே நல்ல குடியை ஆளுகிற நல்ல அரசன் அவற்றை விலக்க வேண்டுமென்று கடியப்பட்டிருக்கின்றது. இவற்றை மநு நூலிலே விலக்கிப் பேசவில்லை. பதினொன்றாவது சாதி ஒழுக்கம். சாதிப் பாகுபாடுகள், குலப்பாகுபாடுகள் அங்கு பேசப்பட்டிருக்கின்றன. இங்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. பன்னிரண்டாவது உழவு. உழவு மிகவும் சிறப்பாகப் பேசப்பட்டிருக்கிறது குறளிலே. எந்தத் தொழிலும் நடைபெறாது, உழவில்லையானால் - என்று சொல்லப் பட்டிருக்கிறது. மநு நூலிலே உழவு கண்டிக்கப்பட்டிருக்கிறது. உழவு செய்யவே கூடாது. 'பாவி'களே உழவு செய்பவர்கள் என்று எழுதியிருக்கிறது மது நூலிலே. தப்பித்தவறி பிராமணன் அதைச் செய்துவிடப் போகின்றான் என்று பிராமணன் அந்தப் பக்கமே திரும்பிப் பார்க் கக்கூடாது என்று அவனுக்குத் தடை போடப்பட்டிருக்கிறது. விளையாட்டுக்காகச் சொல்லவில்லை. பதின்மூன்று ஒழுக்கம். ஒழுக்கம் சில நேரங்களிலே தவறலாம், என்று விலக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது மது நூலிலே. அதாவது ஒரு மனைவி, கணவன் இறந்து விட்டால், குழந்தை இல்லாத நிலையிலே அவன் இறந்திருப்பானேயானல், அவள் கைம்பெண்ணாக ஆக்கப்பட்டிருந்தால், தன்னுடைய குடிமுறைக்காக அவனுடைய உடன்பிறந்தானோடோ, அவனுடைய நெருங்கிய உறவினனோடோ கூடலாம்; கூடி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துக் கொள்ளலாம் என்று மநுநூலிலே சொல்லப்பட்டிருக்கிறது. திருக்குறளிலே எந்நிலையிலும் அதைச் செய்யக்கூடாது. “இன்றியமையாச் சிறப்பின வாயினும் குன்றவருப விடல்”. எவ்வளவு சிறப்புக்காக அது செய்யப்படுவதாயிருந்தாலும்கூட ஒழுக்கம் குன்றுகிற அந்தச் செயலைச் செய்யாதே என்று எல்லாருக்கும் கண்டிக்கப்பட்டிருக்கிறது. பதினான்கு, மநுநூலிலே சொல்லப்பட்டிருக்கிற அறமுறை இருக்கிறதே அது நால்வகை முறை! பிரம்மச்சரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம். இந்த நான்குவகை அறங்களையும் முறையாகப் பேண வேண்டும் அல்லது பூணவேண்டும் - என்று மநு நூல் சொல்கிறது. திருக்குறளில் இரண்டுவகை அறங்கள் (இல்லறம்; துறவறம்) மட்டுந்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படிப் பல வகையான