பக்கம்:தமிழின எழுச்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

54 • தமிழின எழுச்சி

நிலைகளையெல்லாம் மறுத்துப் பேசலாம். பேசினால் அது ஒரு பெரிய சொற்பொழிவாகும். அதேபோல்தான் அந்தக் கௌடில்யனுடைய அர்த்த சாத்திரமும். வாத்சாயனாருடைய காமசூத்திரம் என்னும் அந்த நூலோ பெரிதும் இழிவான நூல். அதை யாராவது ஒரு பெண்ணை வைத்துக்கூட, கணவன் தன் மனைவிக்குக்கூடப் படித்துக் காட்ட முடியாத நூல் அது. அதைப் படித்திருந்தால் உங்களுக்கு விளங்கியிருக்கும்; அவ்வளவு இழிவுச்சுவை நிரம்பியது; இன்பச் சுவையன்று. இழிவான காமநூல்; அது இயற்றப்பட்ட சூழலெல்லாம் வேறு வேறு.

அதனாலே இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த வரலாற்றுக்கே உரிய அரிய நூலான திருக்குறளுக்கு வரலாற்றுச் சிறப்புடைய, மொழி அறிவுடைய, மொழி ஆற்றலுடைய பேரறிஞர் ஒருவர் உரையெழுதி யிருக்கின்றார் என்றால் அதற்குமேல் ஓர் உரை தேவைப்படுமா என்பது ஐயமே என்பதை மட்டும் உங்களுக்குக் கூறிக்கொண்டு நான் எனக்காகத் தரப்பட்ட ('தமிழனின் நான்முனைப் போராட்டம்' என்ற) அந்த தலைப்பில் பேசாது, அப்படிப் பேசவிடாது ஒரு சூழல் அமைந்ததற்காக வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தாலும் இந்த இறுதி நிலைவரை இருந்து கேட்ட உங்களுக்கு என்னுடைய நன்றியைக் கூறிக்கொண்டு உரையை முடித்துக் கொள்கிறேன்.

வணக்கம்.


தென்மொழி, சுவடி-7, ஓலை - 9 அக்-நவம் 1969