பக்கம்:தமிழின எழுச்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
இந்தத் தலைமுறைக்கு
வேறு வேலையில்லை!


(இந்தத் தலைமுறையில் தமிழன் இதைச் செய்யத் தவறுவானானால்,
அடுத்தத் தலைமுறையில் தமிழினம் தன் ஆணிவேரையும்
இழந்துபோக வேண்டியிருக்கும். தமிழ்மொழியின் வீழ்ச்சியே,
தமிழர்களின் வீழ்ச்சியாகவும் அதுவே தமிழ்நிலத்தின் வீழ்ச்சி
யாகவும் அமைந்துவிட்டதை? இக்கால் உள்ள எந்த அரசியல்
தலைவரும் மறுக்க முடியாது.)

ஆரியப் பிடிப்பினின்று தமிழையும், வடவர் பிடியினின்று தமிழ் நாட்டையும் மீட்பதினின்று, இந்தத் தலைமுறையினர்க்கு வேறுவேலை யிருப்பதாக நான் கருதவில்லை. தமிழர்களுக்கிடையில் எத்தனையோ கட்சிகள் உண்டு; எத்தனையோ தலைவர்களும் உள்ளனர். கட்சிகளுக்குப் பல கொள்கைகள். தலைவர்களுக்குப் பல கோட்பாடுகள், இருப்பினும் தமிழர்களுக்கு மிகமிகத் தேவையானதும், அவர்களின் இழிவைப் போக்கிப் பிற உலக இனத்தவரிடையே அவர்களை முன்னேற்றிச் சமநிலையில் கொண்டு நிறுத்துவதும் இம்மொழி, நிலவிடுபாடே! இதை இந்தத் தலைமுறையில் தமிழன் செய்யத் தவறுவானானால், அடுத்த தலைமுறையில் தமிழினம் தன் ஆணிவேரையும் இழந்து போக வேண்டியிருக்கும்.

தமிழினத்திற்கு எத்தனையோ தனித் தன்மைகள் இருந்ததுண்டு. அவன் மொழிச் சிறப்பை விட்டுவிட்டுப் பார்த்தோமானாலும் அவன் குமுகாய அமைப்பும், அரசியலமைப்பும், உளப் பண்பாடும், உலகின்