பக்கம்:தமிழின எழுச்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

76 - தமிழின எழுச்சி

யினின்று பிரித்தே ஆக வேண்டும் - இல்லாவிட்டால் நமக்கு எந்த வகையான நன்மையும் ஏற்படப் போவதில்லை என்ற அளவிலேயே போய்க் கொண்டிருக்கின்றன. (பெருத்த கையொலி) மற்றபடி, இப்படிப்பட்ட கருத்துப் போராட்டங்களை நாம் நடத்தி நடத்தி, நம்முடைய கருத்துகளுக்கு நேர் எதிரிடையான கருத்துகள் வடநாடுகளிலும், வெளிநாடுகளிலும், எதிரிகளால் கவரப்பட்டு வருகின்ற அந்த நிலைகளை நாம் தடுத்து நிறுத்திவிட முடியாது. நமக்குள்ள அடிப்படை உரிமைகளை, மொழி, இனம், நாடு என்ற மூவகை நிலைகளிலும் நமக்குள்ள உரிமைகளை நாம் பெற்றாலொழிய நாம் எத்தகைய மாநாடுகள் கூட்டி, எவ்வளவு வலிமையான உண்மையான கருத்துகளைச் சான்றுடன் நிறுவினாலும் அவற்றிற்கு வெற்றி கிட்டப்போவதே இல்லை . இவற்றுக்குச் செயலளவில் நாம் ஒரு முடிவு கட்டியாக வேண் டும். இதுதான் என்னுடைய முடிவான கருத்து. பாவாணர் அவர்கள் பேசச் சொன்னதற்காக இதையும் இங்குச் சொல்ல வேண்டியவனாக இருக்கின்றேன்.

மற்றபடி, தமிழனுடைய பிறந்தகம் குமரிக் கண்டந்தான் என்று அவனுக்குப் பன்னிப் பன்னிச் சொன்னாலும், அவன் ஆளுகையில் நாம் உள்ளவரை, மாற்றான் அதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. இக்கருத்துக்கு வலிவான சான்றுகளைப் பாவாணர் அவர்கள் தம் நூல்கள் எல்லாவற்றிலும் பல இடங்களிலும் காட்டியிருக்கின்றார்கள். மீண்டும் மீண்டும் அவற்றையே சொல்லிக் கொண்டிருப்பதில் நமக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை . எனவே இந்த வகையில் கருத்துப் போராட்டத்தைவிடக் கைப்போராட்டமே நாம் செய்ய வேண்டுவது என்று கூறி முடித்துக் கொள்கின்றேன். வணக்கம்.

தென்மொழி