பக்கம்:தமிழின எழுச்சி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 81

கத்தியாலோ பிரிந்துபோகும், ஒரு கிளையோ, கொம்போ, குச்சியோ, அம்மரம் போன்றே வேறுமரங்கள் ஆகிவிடா. அம் மரத்தினின்று முழுமைபெற்று வெளியேறும் வித்துகளே வேறுவேறு கால நிலையினும் இட நிலையினும் அவ்வகையான மரங்களைப் படிப்படியாகத் தோற்றுவிக்க முடியும் என்று தெளிவாக அறிந்து கொள்க. உணர்வுப் பிதுக்கத்தாலும், அறிவுத் திரிபாலும், மனவெழுச்சி கொண்டு ஓர் இயக்கத்தினின்று ஒடிந்து வெளியேறும் ஒரு கிளை, தன்னை ஒரு மணற் புதையுள் ஊன்றிக் கொண்டு, தன்னையும் ஒரு மரம் என்று கூறிக் கொள்வதும், நிழலுக்கு அங்காந்து வருவோர் சிலர் அதனையும் தழைத்துப் பொலிந்த ஒரு மரமென்று தவறாகக்கருதி, அதனடியில் தங்கு வதும், அதன் நிழலையும் பாராட்டிப்பரவிப் பயனெதிர் பார்ப்பதும், அதற்கு எருவும் நீரும் இட்டுப் புரக்க முனைவதும், அது பின், படிப்படியாய்ச் சிலநாளில் இலை வாடி, உடல் காய்ந்து, வேரற்றது என்று தன்னை வெளிப்படுத்தி வீழ்கின்றதும், இவ்வுலகியல் நாடக இயக்கக் காட்சிகளில் நல்ல நகைச்சுவைப் பகுதிகளாகும்! இந் நகைச்சுவைக் காட்சி உறுப்பினர்கள் நம் தமிழினத்துள் ஏராளமானவர் அவ்வக் காலத்தே இருக்கத்தான் செய்குவர். ஆனால் அவர்களின் இருத்தல் நிலைகள் உண்மைக்கு உரத்துவலிவாகப் பயன்படுவதைப் பிரித்தறியும் அறிவூட்டம் இல்லாதவர்கள், இயக்கவொழுக்க முடையவர்களைத் தங் களின் ஊன்றுகோல்களாகப் பற்றிக்கொள்ளுதல் வேண்டும். அதனையே, “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே, ஒழுக்கமுடை யார் வாய்ச்சொல்” - என்று குறள்மறை வலியுறுத்தும்.

இவ்வகையில், நம் தமிழ்நாட்டின்கண் ஆங்காங்குத் தோன்றும் இயக்கப் பெருக்கத்திற்கும், மயக்கக் கொள்கைத் தருக்கத்திற்கும் அளவே இல்லை. இவையெல்லாம், தமிழினம் ஒருவகை வளர்நிலை மாற்றத்தின் அடித்தட்டிலேயே உள்ளது என்பதையே காட்டும். நம்மிடையில் ஒரே கொள்கைக்குப் பல இயக்கங்கள் உண்டு. ஒவ் வொன்றும் கொள்கை மாறுபாட்டால் தோன்றியது என்று கருதி விடக் கூடாது. ஆனால் கொள்கை மாறுபாடுதான் இவ்வியக்கங்களுக்கே கரணியம் என்று கவர்ச்சியாகக் கூறிக்கொள்வதில் இயக்கச் சிதைப்பாளர்களுக்கு இடைக்காலத்தில் ஒரு பெருமை கிடைக்கலாம்.இப்பெருமையும் வெறுமையாகப் போய், தங்கள் இயக்கக் கதவுகள் மூடப் படும் காலத்தை அவர்களே அறிவார்கள். ஆனால் ஒன்றை, மிகத் தெளிவான ஒன்றை, வளர்ந்துவரும் தமிழினத்தின் நன்மை நாடும் உள்ளுணர்வுள்ளவர்கள், நன்றாக அறிந்துவைத்துக் கொள்ளுதல் பாட்டிற்காக ஒவ்வோர் இயக்கத்தைத் தோற்றுவிப்போமாயின், இந் நூற்றாண்டின் இறுதியில் நம் இனத்துள்ள ஒவ்வொருவருமே ஒவ்வோர்