பக்கம்:தமிழின எழுச்சி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

92 • தமிழின எழுச்சி

போல் தோன்றும் மாயை உணர்வுகள் கானல் நீரைப்போன்றன, ஒருவனின் இலக்கிய ஆக்கமோ, தொண்டுப் பாடுகளோ, காலக் கல்லால் உறைக்கப் பெற்று, மக்கள் மனங்களால் தேரப் பெறுதல் வேண்டும். அப்பொழுதுதான் அது புகழாகும். வெறுமனே வேலையற்ற சிலர் வாய்க்கு வந்தவாறு எழுதுவதும் பேசுவதும் புகழாகாது; இகழே! தலைக்குப் பெரிதான மகுடங்களைப் பிறர் வைக்கும் பொழுது, அவற்றைத் தாங்கிக் கொள்ளுதற்கு நாம் நாணுதல் வேண்டும். இல்லெனில் அரசனைப்போல் இராது; கோமாளியைப் போலவே இருக்கும். தமிழ்நாட்டில் இன்றைக்கிருக்கும் மிகப் பலர் புகழ்க் கோமாளிகளே! அவர்கள் - வெட்கமிலாது; - அறிவுப்புலன் கெட்டுத் தம்முள் ஒருவர்க்கொருவர் அளவுக்கு மீறிப் புகழ்ந்து கொள்கின்றனர். தமக்கு வேண்டாதவரை அளவுக்கு மீறி இகழ்ந்தும் பேசுகின்றனர். ஒரே ஒருவர் புகழ்வதாலேயே ஒருவர் தகுதிபெற்று விடுவதில்லை . தன் இனத்தையே இவ்வாறு அளவுக்கு மீறிப் புகழ்ந்து கொள்கின்றவனும், அளவுக்கு மீறி இகழ்ந்து கொள்கின்றவனும் தமிழனைத் தவிர, வேறு எவராகவும் இருக்கமுடியாது. புகழ்க் காழ்ப்பாலேயே பல போலி இயக்கங்கள் முளைவிட்டு வளர்கின்றன. ஒவ்வோரியக்கமும் ஒவ்வொரு குழுவாக இயங்குகின்றது, ஒவ்வொரு குழுவும் ஒவ்வொருவரை ஒரே துறையில் போட்டி போட்டுக்கொண்டு பாராட்டித் திரிகின்ற மனப்பாங்கு பெருகிவருகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருவர் மறைந்துவிட்டால். அவருக்குப் பின் யார் - என்னும் புகழாராய்ச்சி இப்பொழுது நடக்கும் ஆராய்ச்சி களிலெல்லாம் தலைசிறந்ததும், மிகப் பரந்ததும் ஆகும். புகழ்பெற்ற ஒருவருக்குப்பின் இத்தகைய நிலைகள் பலவாறு நாட்டையும் புகழ் அங்காப்புடைய சிலர் மனங்களையும் அலைக்கழிப்பதுண்டு. பெரும்பாலும், தகுதிக் குறைவானவர்களும், தன்னம்பிக்கை யற்றவர்களுமே இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு அறிவுணர்வுகொண்ட மக்களில் ஒரு பகுதியினரைக் குழப்பி வருகின்றனர். அக்குழப்பத்தில், தங்களையும் பிறர் மதிக்கத்தக்க ஒருவராக உருவாக்கிக் கொள்கின்றனர். பொதுவாக இந்த நிலை இக்கால் ஒரு நாகரிகமாகவே பரவி வருகிறது. பிற நாடுகளில் அமெரிக்காவிலும், இந்தியாவில் முழுமையாகவும் இவ்வுணர்ச்சி மக்களை ஆட்கொண்டுள்ளது.

புகழ்பெற்றவர்களாக விளங்கிய அமெரிக்க அதிபர் கென்னடி, இந்தியத் தலைவர்கள் நேரு, பெரியார் இவர்களுக்குப்பின் பிறங்கடைத் தலைவர்கள் யார் என்னும் புகழ்ப் போட்டிகள் இவ்விரு நாடுகளையும் அலைக்கழித்தன. அரசியல், குமுகாயத் துறைகளில் வேர்கொண்ட இந்நிலைகள், இக்கால் இலக்கியத் துறையிலும் ஏற்பட்டுத் தமிழர்