பக்கம்:தமிழின எழுச்சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

94 • தமிழின எழுச்சி

அறிவுணர்வுகளைத் தகர்த்தெறியும்; அழிவுணர்வுகளையே மக்களிடைத் தோற்றுவிக்கும். புதிய உணர்வுகள் கிளர்ந்து வரும் அறிவூற்றை அவை அடைக்கும். அவற்றால் மக்களினத்திற்கோ அறிவுணர்வுக்கோ ஒரு பயனும் விளையாது. மாறாகத் தீமையையே அவை உருவாக்கும் என்று நல்லுணர்வாளர்களே தெளிந்து கொள்ளுதல் வேண்டும்.

தமிழர்கள் பிளவுபட்டால் மீண்டும் ஆரியம் தலையெடுப்பது உறுதி. தன் மொழியின் மேலும் இனத்தின் மேலும் நாட்டு முன்னேற்றத்தின்மேலும் அன்ப வையாதவன் உலக நலம் பேசுவது ஊரை ஏமாற்றும் செயலே! எனவே, சமற்கிருதத்தினின்று தமிழையும், பார்ப்பனியத்தினின்று தமிழினத்தையும், வடவராட்சியினின்று தமிழகத்தையும் மீட்பதைவிட, இக்காலத் தமிழ் இளைஞர்களுக்கு வேறு வேலையிருப்பதாக நாம் கருதுவதற்கில்லை. இப்பொழுதுள்ள பெரும்பாலான தலைவர்களைத் தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் நன்மை செய்பவராகக் கருதமுடியாது. அந்நிலைகளைப் பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்காமல், வெறும் மன அரிப்புக் கொண்டு, பிறர்போல் காழ்ப்புற்றுப் புகழ்ப் போாட்டிகளில் மனந்திரும்பச் செய்வது நாட்டுக்கு நல்லதன்று, மொழிக்கும் இனத்திற்கும் அவற்றால் பெருங்கேடுகளே வரக்காத்திருக்கின்றன. தமிழர் முன்னேறாமைக்குக் கரணியம், தமிழ் முன்னேறாமையே! தமிழ் முன்னேறாமைக்குக் கரணியம் அது தந்நலவுணர்வுள்ளவர்களிடமும் விளம்பர வேட்கையுள்ளவர் களிடமும் பார்ப்பனப் பகைவர்களிடமும் சிக்கிக்கொண்டிருப்பதே என்பதை ஒவ்வோர் உண்மைத் தமிழனும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். தமிழையும், தமிழினத்தையும் வடமொழிக்கும், பார்ப்ப னர்க்கும் அடிமைப்படுத்திவிட்டுத் தமிழர்கள் தமிழ் நிலத்தில் மட்டுமன்றி வேறு எந்த நிலத்திலும் உயர்ச்சிபெற முடியாது, இதை உலகெங்கணும் உள்ள தமிழர்கள் முதற்கண் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

(தொடரும்...)

(அதன்பிறகு இக்கட்டுரைத் தொடர்ச்சியை ஐயா
எழுதிடவில்லை )


தென்மொழி சுவடி-12, ஓலை-5, 6, 7 மார்ச், ஏப், மே, சூன்-1975