பக்கம்:தமிழின எழுச்சி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

புதுவைப் பாவேந்தர் சிலை ஓர் எச்சரிக்கை!


புதுவைக் கடற்கரையில், காந்திசிலைக்கு நேராக, முன்னர் துய்ப்பளைக்சு சிலை இருந்த இருக்கையில், தி.மு.க. ஆளுமையில் உள்ள பொழுது பாவேந்தர் சிலை ஒன்று வைக்கப்பெற்றது. அதனை இப்பொழுது அந்த இடத்திலிருந்து அகற்றிவிட்டு, வேறோர் இடத்தில் வைக்கப் போவதாகவும், அந்த இடத்தில் நேரு சிலையை வைக்கப் போவதாகவும், புதுவை நகரமன்றம் திட்டமிட்டுள்ளதாம்.

பொதுவாகவே வடநாட்டவர்கள் சிலைகளும், தெருப்பெயர் களும் தமிழ்நாட்டில் ஏராளம்! ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத் திந்தியப் பெருந் தலைவர்களுக்கும்கூட வட நாடுகளில் சிலைகளோ தெருப்பெயர்களோ அறவே இல்லை என்பதை நாம் அனைவரும் அறிதல் வேண்டும். இந்த நிலை ஒன்றே தமிழ் நாட்டவரின் ஏமாளித் தனத்தையும், வடநாட்டவரின் கரவான ஆளுமைத் திறத்தையும் தெளிவாக நாம் அறிந்து கொள்ளப் போதுமான சான்றாகும். இந்த நிலை களின் தொடர்ச்சியாகவே, இப்பொழுது பாவேந்தர் சிலையகற்றப் படுவதும் நடைபெறப்போகின்றதாக நாம் உணர்தல் வேண்டும். இந்த நிலைக்கு இடங்கொடுப்போமானால், இனி இந்நாட்டில் தமிழ்த் தலைவர்களின் சிலைகளை வைப்பதற்கேகூட தடை வந்தாலும் வரலாம். எனவே. இந்த நிலையில் நம் உரிமையையும் மதிப்பையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.

பாவேந்தர் இந்த நாட்டின் ஓர் இலக்கியப்பாவலர் என்பதைவிட, இந்த நாட்டின் அடிமைத்தனத்திற்கே சாவு மணியடித்து, விடுதலைக்கு வித்திட்ட பாவலலர் என்பதிலேயே நமக்குப் பெருமையும் பெருமித-