பக்கம்:தமிழின எழுச்சி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை


ஒருவீர் தோற்பினும் தோற்பதுங் குடியே!


தமிழினம் மிகவும் நொந்துபோன ஓர் இனம், மிகச் சீரும் சிறப்புமாக வாழ்ந்த இப்பேரினம், கடந்த மூவாயிரமாண்டுகளாகத் தொடர்ந்த மொழித் தாக்குதலும் இனத் தாக்குதலும் உற்றுத், தேனினும் இனியதும், இயற்கையறிவு நிரம்பியதுமான தன் தாய்மொழியையும், அனைத்தினும் சிறந்த பண்பாடு நிறைந்த தன் இனத்தையும் சீரழித்துக் கொண்டு, குற்றுயிரும் குலையுயிருமாகச் சாநடைபோட்டு இன்று வாழ்ந்து கொண்டுள்ளது. இன்றுவாழ் தமிழன் தன் பெயருந்திருவும் உருவும் சிதைந்து, தன் தாய்மொழியையே நன்கு பேசவும் எழுதவும் அறியாத மூங்கையாய், பிற மொழிக்கும் இனத்திற்குமே ஏவல் போகும் முழு அடிமையாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இவன் வாழ்கின்றான் என்று சொல்வதைவிடக் கொஞ்சங் கொஞ்சமாகச் சீரழிந்து செத்துக் கொண்டிருக்கின்றான் என்பதே மிகப் பொருத்தமாகும்.

இந்நிலையில், இவ்வினத்தைப்பற்றி முழுக்கவலை கொண்டு, இதன் இயற்கையாம் சிறப்பு நிலைகளைக் கட்டிக் காத்துக் கொள்ள வேண்டும் என்னும் ஏக்கத்தினால், இதனைப் புறத் திருத்தமும் அகத் திருத்தமும் செய்யும் உலையாப் பெரும் பணியுள், தம்மை முற்றும் மூழ்க்கிக் கொண்ட - கொள்கின்ற தலைவரும், தொண்டரும் இக்கால் மிகச்சிலர். அவர்கள் தம் அறிவு நிலையானும், வினை நிலையானும்; முற்றும் மதிமயக்கமும் மனக்கலக்கமும் செயல் திரிபும் கொண்ட இற்றைத் தமிழனுக்குத் தம் மொழி, இனத்துப் பழம் பெருமைகளையெல்லாம் எடுத்தெடுத்து விளக்கி, இவன் சீரழிந்த வரலாற்றையும், சிறப்பிழந்த நிலைகளையும் நினைவூட்டி, இவனை அற்றை