உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தமிழியக்கம்

கூற்றமென வாழ்வதுவோ
    தமிழுக்கே ஏடெழுதும்
        கூட்டம்? தீமை
மாற்றவரும் அச்சகத்தார்
    வகைமறந்து போனாரோ?
        சொல்லாக் கத்தார்
தூற்றுமொழி ஏன்சுமந்தார்?
    துண்டறிக்கை யாளருமோ
        தீயர்? வாழ்வில்
ஏற்றமுற எண்ணாத
    தமிழருயிர் வாழ்வதினும்
        இறத்தல் நன்றே.9

நல்லஅரும் பெருளுடையார்
    நந்தமிழ்க்கோ பகையாவார்?
        நாட்டில் ஆணை
சொல்லவரும் அரசியலார்
    செந்தமிழ்நா டிதுவென்றும்
        தெரியார் போலும்!
வல்லவரும் பெரியநிலை
    வாய்த்தவரும் என்செய்தார்?
        இன்ப வாழ்வின்
எல்லையறிந் தும்திருந்தாத்
    தமிழருயிர் வாழ்வதினும்
        இறத்தல் நன்றே. 10