உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தமிழியக்கம்

திருடர்கள் ஜாக்கிரதை இதைத்
    திருடருண்டு விழிப்போடி
        ருங்கள் என்றால்,
வருந்தீமை என்ன? நியா
    யஸ்தலத்தை அறமன்றம்
        எனில்வாய்க் காதோ?
அருவருக்கும் நெஞ்சுடையார்
    அருவருக்கும் செயலுடையார்
        அன்றோ இந்தக்
கருவறுக்கும் வினைசெய்வார்
     கலப்பாலில் துளிநஞ்சும்
        கலத்தல் வேண்டாம்.34

அரசியலார் அலுவலகம்
    அறமன்றம் இங்கெல்லாம்
       அலுவல் பெற்றீர்
உரையனைத்தும் ஆங்கிலமோ?
    உணர்விலையோ? ஒழுக்கந்தான்
        இதுவென் பீரோ.
வரும்நாட்டுப் புறத்தவரின்
    தமிழ்ப்பேச்சும் பிடிப்பதில்லை
        வண்ட மிழ்சேர்
திருநாட்டிற் பிறந்தோமென்
    றெண்ணுவதும் இல்லை இனித்
        திருந்து வீரே. 35