உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தமிழியக்கம்

தமிழ்மகளாய்ப் பிறந்தவளும்
    தமிழ்ப்பகைவன் தனைப்புணர்ந்து
        தமிழ்பா டாமல்
சுமக்கரிய தூற்றுதலைச்
    சுமப்பதுவும் நன்றேயோ?
        பார்ப்ப னத்தி,
நமக்குரிய தமிழ்காக்க
    ஒப்பாமை நன்றறியும்
        இந்த நாடு!
தமிழ்நாட்டுப் பாடகரே,
    தமிழ்பாடித் தமிழ்மானம்
        காப்பீர் நன்றே.

தமிழ்மொழியில் தமிழ்ப்பாடல்
    மிகவுண்டு தமிழ்க்கவிஞர்
        பல்லோர் உள்ளார்
உமைத்தாழ்வு படுத்தாதீர்
    பார்ப்பான் சொல் கேட்டபடி
        உயிர்வா ழாதீர்!
உமைவிலக்கிப் பணக்காரன்
    உடன்சேர்ந்து நலம்கொள்ளும்
        உளவன் பார்ப்பான்!
சிமிழ்க்காமல் விழித்திடுங்கள்
    பார்ப்பானை நம்பாதீர்
        திறமை கொள்வீர்!