பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. 39. பாசனன் பயிர் செய்வோன் 40. புலியா!ர?iண்டை புலியையும் சிக்கவைக்கும் முட் புதர் 42. மண்ணிப்பன் மந்தமானவன் 42. மறவன் விரன் 43. மாடவீட்டான் மாட வீடுடையான் 44, மான குண்டன் மானமுடைய பருமனானவன் 45. வலஞ்சியான் வலஞ்சி ஊரினன் 46. வலியாண்டி வலியவன் 47. வேடன் வேட்டையாடுபவன் 48. வேலன் வேலுடையவன் மேற்கண்ட பட்டியலில் உள்ள சொற்களுள் சில வற்றின் சரியான தமிழ் வடிவும் பொருள் விளக்கமும் மேலும் ஆராய்தற்குரியன. ஆயினும். கானாடன் இலக்கிய நலத்திற்கும் ‘எருமையன் இயல்பான கற்பனைக்கும் கார வடையான் கொழுக்கட்டை நகைச்சுவைக்கும் எடுத்துக் காட்டுக்கள். 'கூத்தாடி சாம்பலாடி மலையாளிகளின் கலையுணர்வுக்கும் சமயவுணர்வுக்கும் சான்றுகளாதல் கூடும். கோப்பையன் மதுரை வட்டாரத்தில் திறமை மிக்கவனைக் குறிக்க அவன் பெரிய கோப்பன்' என வழங்கும் வழக்கை நினைவுபடுத்தும். மாடவீட்டான்', ‘மான குண்டன்' என்பன முறையே பழங்குடி மக்களின் புறச் செல்வத்தையும் அகச் செல்வத்தையும் புலப்படுத்தும். வேடன், மறவன் பாசனன்’ மலைவாழ் மக்களின் பல வகைத் தொழிலாற்றலைப் புலப்படுத்தும். சொல்லன்” மலையாளிகளின் மங்காப் புகழ்ச் செல்வமாய் மானிட இயலார் போற்றும் பெருஞ்செல்வமாய் விளங்கும் வாய்மை நலத்தை விளக்கும். - .