பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ எழுதப்பெற்ற முப்பத்திரண்டு ஆண்டுகட்குப்பின் - 1941 இல் தாம் நேரில் பார்த்த எருத்தாட்ட நிகழ்ச்சியொன்றைத் தமக்குத் தோன்றிய மானிடவியல் ஆராய்ச்சிக் குறிப்பு களோடு டாக்டர் எரன்பில்ஸ் தமது நூலில் வரைந் துள்ளார். அப்பகுதியின் தமிழாக்கத்தை ஈண்டுத் தருதல் பயன் தருவதாகும். அப்பகுதி வருமாறு: "மந்திர வளமைக் கருத்துத் தொடர்பாக எருத்தாட்டம் பற்றிய சில கருத்துக்கள் ஈண்டு எண்ணற்குரியன. மாரி யம்மன் கோவிலுக்கு எதிரே கிராம விழாக்கள் நடைபெறும் திடலுக்கருகே ஒரு சிறு அடைப்புக்குள் கிராமத்துக் காளை மாடுகள் கொண்டுவரப்பட்டன. பூசாரிகளும் கிராமத்து முதியோர்களும் சடங்கு சார்ந்த பல ஏற்பாடுகளைச் செய்த பின் அணி அணியாகக் காளைமாடுகளுள் ஒவ்வொன்றும் ஒன்றன்பின் ஒன்றாகத் தனித்தனியே அடைப்புக்குள் வளிருந்து பதினைந்து இருபது இளைஞர்கள் பின் தொடர வெட்ட வெளிக்குக் கொண்டுவரப்பெற்றது. அவ்விளை ஞர்கள் நட்ட நடுவில் காளை மாட்டின் மூக்கனாங்கயிற்றில் பிணைக்கப்பெற்ற நீண்டதொரு கயிற்றைப் பற்றிக் கொண்டு மாட்டின் இரு மருங்கிலும் ஒருபடித்தான இடை வெளியில் விட்டுவிட்டு நின்றார்கள். மேலும், மாட்டிற்கு முன்னும் பின்னும் இருவர் நின்று கொண்டு மாட்டை விரட்டினர். இவ்விருவருள் ஒருவர் நான் சேர்வராயன் மலையில் கண்ட கரிராமன் கோவில் பூசாரியார். அவர் தம்மைக் கம்பளம் ஒன்றால் மறைத்துக் கொண்டிருந்தார்; திருநீறு பூசிக் கொண்டிருந்தார். உண்மையில் ஒரு கோமாளி போலக் காட்சி அளித்த அவர், ஆட்டுத்தோல் துண்டு ஒன்று பொருத்தப்பட்ட நீண்ட மூங்கில் ஒன்றை வைத்திருந்தார். அவர் அதைக் கொண்டு மாட்டைப் புண் படுத்தாமல் கூச்சத் தொல்லை கொடுத்து விரட்டினார்; ஆட்டுத் தோலைக்கொண்டு மாட்டின் பாலுறுப்புகளில் கூச்சங்காட்டினார். இந்தச் சமயத்திலும், ஒருமுறை மாடு விழுந்து விட்ட போதும், அதைக் கயிற்றின் இருபுறமும் பற்றிநின்ற மக்கள் இழுத்தபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள்-அவர்களுள் சிறப்பாக மங்கையர் - கொல்லென்று சிரித்தனர். அவ்வாறே வேறுவேறு எருத்து 6. Dr. C. R. Baron Ehrenfels : Traces of a Matriarchal Civilization among the Kollimalaiyalis (1943), pp. 70-1.