பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 ஆட்டங்கட்கு இடையே பொழுது போக்காக மாறுவேடம் பூண்டிருந்த அந்த இளம்பூசாரியார் வேடிக்கைகள் செய்து கொண்டிருந்தபோது கூடியிருந்தோர் அரை அச்சத்தோடும் முழுமகிழ்ச்சியோடும் அவ்வேடிக்கைகளைச் சுவைத்த வண்ணம் இருந்தனர். ஏதாவது ஒரு காளை வெறி கொண்டு கிளம்பித் தன்னைப் பிணித்துக்கொண்டிருக்கும் கயிற்றைப் பற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்களை இழுத்துக்கொண்டு ஒடுமேல், அந்த இளைஞர்கள் மகிழ்ச்சி யால் கூக்குரல் இட்டார்கள். அந்த நேரத்தில் வெட்ட வெளியின் எதிர்ப்புறத்திற்கு வெற்றியோடு மாடு வந்து சேர்ந்ததைக் குறிக்கும் வகையில் ஒரு கிழவர் நெடுநேரம் உரத்துச் சங்கொலி செய்தார். அந்தக் குறிப்பிட்ட மாட்டின் ஆட்டம் இரண்டு அல்லது மூன்று முறைகள் கூடத் திரும்பத் திரும்ப ஆட்டுவிக்கப்பட்டது. மாட்டைப்பற்றிதிற்கும் கயிறு காட்டு வேட்டையில் கைப்பற்றிய மான்தோலால் ஆகியதாய் இருத்தல் வேண்டும். இந்த எருத்து ஆட்டத்தைக் காட்டு வேட்டையோடு தொடர்புபடுத்தும் இன்னொரு குறிப்பும் உண்டு. அது, மாட்டுப்பொங்கல் அன்று மேற்கொள்ளும் காட்டுவேட்டை வெற்றியுற்றாலே எருத்தாட்டம் வைக்க வேண்டும் என்று கொல்லி மலை யாளிகட்குள் இருந்த விதியே ஆகும்”. 'கடைசி எருதின் ஆட்டம் முடிந்ததும் மாட்டைக் கயிற்றால் பற்றிக்கொண்டிருந்த அத்தனை பேரும் ஊர்க் கவுண்டன்-கிராம முதியோர் முன்னிலையில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்தனர். அப்போது இளைஞர்கள் பற்றி இருந்த கயிறு அவர்கள் கழுத்தில் வைக்கப்பட்டது. அவ்வாறு குப்புற விழுந்து வணங்காதவர்களை மாறுவேடம் பூண்டு நீறு பூசிக் கொண்டு மருள் உற்ற நிலையில் இருந்த பூசாரியார் உதைத்துத் தள்ளினார். கீழே விழுந்து வணங் கியவர் முதியோர்களைக் கடந்த ஆண்டில் தாங்கள் செய்த எல்லாப் பிழைகளையும் பொறுத்தருளுமாறும் கிராமத்தில் மாட்டு வளம்பெருக வாழ்த்துமாறும் வேண்டினர். அது போழ்து சேர்வராயன் மலையில் கோயில்கொண்டிருக்கும் கரிராமன் சார்பில் பேசுவதுபோலப் பேசிய ஊர்க் கவுண் டன், இளைஞர்கள் கேட்ட இரு வரத்தையும் கொடுத்தான். இதற்குப்பின், நால்வர் சுமந்த இரு மூங்கில்களால் ஆகிய பல்லக்கில் பூசாரியர் ஊர்வலமாகச் செல்லல்-ஒரு முது மகள் இளமங்கையர் இருவர் வண்ணநீரால் நீராட்டப்